முடியை பராமரிப்பதற்காக எத்தனையோ செயற்கையான ஹேர் பேக்குகள், சீரம், ஹேர் ஆயில்கள் என பலவற்றை வாங்குகிறோம். இவை அனைத்தும் வாங்குவதற்கு பணம் அதிகமாக செலவாவதுடன், சில இரசாயனங்கள் நமக்கு அலர்ஜியை ஏற்படுத்தக் கூடியவை. அந்த வகையில், இரசாயனம் சேர்க்காமல் வீட்டிலேயே ஹேர் பேக் எப்படி செய்வது என தற்போது பார்க்கலாம்.
இந்த ஹேர் பேக் செய்வதற்கு வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் இருந்தாலே போதும். அதன்படி, வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் இரண்டையும் ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை, மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும். இந்த அரைத்து எடுத்தக் கலவையை நம் முடியின் வேர்ப்பகுதி முதல் நுனிப்பகுதி வரை தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்னர், 20 நிமிடங்கள் கழித்து சீவக்காய் போட்டு தலைக்கு குளிக்கலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை இந்த ஹேர் பேக் பயன்படுத்தினால் தலை முடி ஆரோக்கியமாக இருக்கும்.
பெரும்பாலும் போதுமான சத்துகள் இல்லாததாலும், உடல் சூடு காரணத்தினாலும் முடி உதிர்வு ஏற்படும். இதில் உள்ள கருஞ்சீரகம் முடிக்கு தேவையான சத்துகளை வழங்குகிறது. வெந்தயம் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை கொடுக்கிறது. இதன் காரணமாக முடி உதிர்வு பிரச்சனை குறையத் தொடங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“