சுவையான வெந்தயக் குழம்பு: பேச்சிலர்களுக்கான எளிய செய்முறை

vendhaya kuzhambu in tamil: வெந்தய்க் குழம்பு அளவில்லா பலன்களைக் கொண்டது. இது செய்வதற்கு எளிமையான, டேஸ்டான உணவும்கூட! வெந்தயத்தை எப்படி குழம்பு செய்வது?

By: October 18, 2020, 9:24:06 AM

Fenugreek Kuzhambu Recipe, fenugreek kuzhambu Tamil Video: வெந்தயத்தின் பயன்கள் அளப்பரியது. உடல் சூட்டைத் தணிக்கவும், அழகு பராமரிப்புக்கும் இது உகந்தது. வெந்தயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி வெப்பத்தை தணிக்கிறது. மலச்சிக்கலை சீராக்கும். வெந்தயத்தில் இருக்கும் எண்ணெய் பசை முடி கொட்டுவதை குறைத்து கருமையாகவும், நீளமாகவும் வளர உதவும்.

வெந்தய்க் குழம்பும் அதேபோல அளவில்லா பலன்களைக் கொண்டது. இது செய்வதற்கு எளிமையான, டேஸ்டான உணவும்கூட! வெந்தயத்தை எப்படி குழம்பு செய்வது என்பதைப் பார்ப்போம்.

fenugreek kuzhambu Recipe fenugreek kuzhambu Tamil Video: வெந்தயம் குழம்பு

தேவையானப் பொருட்கள்
வெந்தயம் – ஒரு கைப்பிடி அளவு

பூண்டு – 15 அல்லது 20 பற்கள்

புளி – நெல்லிக்காய் அளவு

காய்ந்த மிளகாய் – ஒன்று

கறிவேப்பிலை – சிறிதளவு

குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

வெல்லம் (விருப்பப்பட்டால்) – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வெந்தயம் குழம்பு செய்முறை

வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.

வெந்தயம் சிவந்து மணம் வந்த பின்பு அதில் புளியைக் கரைத்து விடவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த்தூள், சிறிது வெல்லம் ஆகியவற்றை சேர்க்கவும்.

இப்போது வேறொரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி குழம்புடன் சேர்க்கவும். குழம்பு கொதித்து, நன்கு மணம் வந்ததும் இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். சுவையான வெந்தயக் குழம்பு தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Fenugreek kuzhambu recipe fenugreek kuzhambu tamil video vendhaya kuzhambu in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X