வெந்தயம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று கூறப்படுகிறது. ஆனால் எந்த அளவு எடுத்துகொள்ள வேண்டும் என்றும் எந்த அளவிற்கு அதன் பலன் இருக்கும் என்பதை மருத்துவர் அருண்குமார் வீடியோவில் விளக்கி உள்ளார்.
இதில் கேலக்டோமான் என்ற கார்போஹைட்ரேட் வகை உள்ளது. செபோனின்ஸ் என்று சொல்லக்கூடிய சில முக்கியமான வேதியல் விஷயம் இருக்கிறது. 4 ஹைட்ராக்ஸி ஐசோலியூசின் இந்த மூன்றும்தான் இதன் பயன்களுக்கு காரணம்.
4 ஹைட்ராக்ஸி ஐசோலியூசின் என்பது இன்சிலினை உடல் எடுத்துகொள்ளாமல் இருக்கும் தன்மையை இது குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மெட்போர்மின் மாத்திரைகளுக்கு நிகரான பயன்கள் வெந்தயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு நிகராக பயன்கள் பெற 20 முதல் 25 கிராம் வெந்தயத்தை நாம் எடுத்துகொள்ள வேண்டும். இந்நிலையில் இந்த அளவிற்கு எடுத்துகொண்டால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு பலன் கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
இதில் உள்ள கோலக்டோமான் பசியை கட்டுப்படுத்தும் திறமை கொண்டது. சர்க்கரை நோயாளிகள் இதை எடுத்துகொண்டால் அதிகமாக சாப்பிடாமல் இருப்பார்கள். இதனால் உடல் எடை குறையும்.
மேலும் மெட்போர்மின் மருந்து என்பது ஆரம்பநிலை சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதிகமான சர்கக்ரை இருந்தால் அவர்களுக்கு இந்த மெட்போர்மின் மாத்திரைகள் வேலை செய்யாது.
எச்பிஏ1சி அளவு 8 அல்லது 9-க்கு அதிகமாக உள்ளவர்களுக்கு வெந்தயம் பயன்தராது. ரொம்ப அதிக அளவு சர்க்கரை இருப்பவர்களுக்கு வெந்தயம் பயன்தராது.
அதிகம் உடல் பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு தசைகளில் இருக்கும் கிளைக்கோஜன் தீர்ந்துவிடும். இந்நிலையில் இவர்கள் வெந்தயம் எடுத்துகொண்டால், இந்த கிளைக்கோஜன் தசைகளில் மீண்டும் உருவாகும் வேகத்தை இது அதிகரிக்கும். இதுபோல விளையாட்டு வீரர்கள் 10 முதல் 15 கிராம் வரை எடுத்துகொண்டால் நன்றாக அதிக நேரம் விளையாட முடியும்.
கல்லிரல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புக்கு வெந்தயம் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் எலிகளுக்கு நடத்திய சோதனையில்தான் இது நிரூபனமாகியிருக்கிறது. மனிதர்களிடத்தில் இன்னும் ஆய்வு நடத்தப்படவில்லை.
இந்நிலையில் மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு வெந்தயம் சாப்பிடால் தீர்வாக இருக்கும். ஆண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைக்கும் இது தீர்வாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.