வெந்தயம் நம் வீடுகளிலும் இருக்கும் ஒரு முக்கிய தானிய உணவு பொருள் ஆகும். நம் அன்றாட உணவில் வெந்தயம் சாப்பிடுவது பல உடல் நன்மைகளை தரும். வெந்தயம் நமது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. மேலும் வெந்தயத்தில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
முக்கியமாக இது ரத்த சர்க்கரையை அளவை கட்டுக்குள் வைக்கிறது. உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. இவ்வளவு நன்மைகள் நிறைந்த வெந்தயம் மாரடைப்பு அபாயத்தையும் தடுக்கும் என சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
https://www.facebook.com/reel/376232402037333
அவர் பேசுகையில், வெந்தயத்தை அரைத்து பொடி செய்து பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் அரை ஸ்பூன் சாப்பிட வேண்டும். இருக்கிற தானியங்களில் ஆகச் சிறந்தது வெந்தயம். வெந்தயத்தில் கரையும் நாரும் உள்ளது கரையாததும் உள்ளது. சாலிபில் ஃபைபர், இன்சாலிபில் ஃபைபர் உள்ளது.
சாலிபில் ஃபைபர் மாரடைப்பு வராமல் தடுக்கிறது. இன்சாலிபில் ஃபைபர் மலச்சிக்கலை சரி செய்ய வழிவகுக்கிறது. ஹீட் உடம்பு உள்ளவர்கள் வெந்தயத்தை நீரில் போட்டு குடித்து வரலாம். கொழும்பு குறைக்க விரும்புபவர்கள் நேரடியாக பொடி செய்து சாப்பிடுவது சிறந்தது என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“