Advertisment

வெந்தயம், வெல்லம், அரிசி... டேஸ்டியான சூப்பர் ஃபுட்; லேடீஸ் மிஸ் பண்ணாதீங்க!

பல ஆரோக்கிய பயன்களை கொண்டுள்ள வெந்தியத்தில் ஹெல்தியான களி எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
18 Aug 2023 புதுப்பிக்கப்பட்டது Sep 23, 2023 14:44 IST
Fenugreek recipes: simple steps to make Vendhaya Kali tamil

நம்முடைய அன்றாட சமையலில் வெந்தியத்திற்கு முக்கிய இடம் உண்டு. இவற்றை நமது உணவுகளுடன் சேர்ப்பதால் பல ஊட்டச் சத்துக்களையும் பெற முடிகிறது. இதில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவை உள்ளன. மேலும் சுண்ணாம்பு, இரும்பு, சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.

Advertisment

வெந்தயம் ஒரு ஆன்டிசிட்டாக செயல்படுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது மற்றும் சீரண சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இவை கொழுப்பைக் குறைப்பதோடு பித்தம் மற்றும் கபம் அதிகமாக உள்ள நபர்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் வலியை போக்கவும் வெந்தயம் உதவுகிறது.

publive-image

இப்படி பல ஆரோக்கிய பயன்களை கொண்டுள்ள வெந்தியத்தில் டேஸ்டியான மற்றும் ஹெல்தியான களி எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.

வெந்தயக் களி செய்யத் தேவையான பொருட்கள்:

publive-image

புழுங்கல் அரிசி - 1 கப்

வெந்தயம் - 1/4 கப்

வெல்லம் பாகு - 1 1/2 கப்

ஏலக்காய் தூள் - சிறிதளவு

நல்லெண்ணெய் - 1/4 கப்

வெந்தயக் களி சிம்பிள் செய்முறை:

முதலில் புழுங்கல் அரிசி மற்றும் வெந்தயத்தை தண்ணீரில் சுமார் 5 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். கசப்பு பிடிக்காதவர்கள் இவற்றுடன் 1/4 உளுந்து சேர்த்துக்கொள்ளவும். இவை நன்கு ஊறிய பிறகு அவற்றை கிரைண்டர் அல்லது மிக்சியில் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.

தயரான மாவை ஒரு கனமான பாத்திரம் எடுத்து அதில் இட்டு கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும்.

மாவு கெட்டியாகும் வரை கிளறிய பிறகு அவற்றுடன் வெல்ல பாகு சேர்க்கவும்.

தொடர்ந்து தட்டி வைத்துள்ள ஏலக்காய் தூள் சேர்த்து களி பதத்திற்கு நன்கு கிளறவும்.

பிறகு தயராகியுள்ள வெந்தய களியை கீழே இறக்கும் முன் அவற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்து கிளறி கொள்ளவும்.

publive-image

இப்போது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டேஸ்டியான மற்றும் ஹெல்தியான வெந்தயக்களி தயாராக இருக்கும். அவற்றை ருசித்து மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment