Fenugreek Seeds benefits helps in weight loss Tamil News : நீங்கள் புதிய எடை குறைப்பு பானங்களை முயற்சி செய்ய விரும்பினால், இந்த மேஜிக் பானம் நிச்சயமாக உங்களுக்குப் பிடித்த பட்டியலில் இடம் பெறும். வெந்தய நீர் எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளின் நீண்ட பட்டியலையும் வழங்குகிறது. இதை வீட்டிலேயே எளிதாகத் தயாரித்து வெறும் வயிற்றில் சூடாகக் குடிக்கலாம். இது மற்ற எடை குறைப்பு பானங்கள் போலல்லாமல் நல்ல சுவையாக இருக்கும் மற்றும் அதீத நறுமணம் கொண்டவை. எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையைப் பின்பற்றி இந்த பானத்தை முயற்சி செய்து பாருங்கள்.
வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீரைக் குடிப்பதால் எடை குறைப்பு செயல்முறை துரிதப்படுத்துகிறது மற்றும் வீக்கத்தைத் தடுக்கிறது. வெந்தயத்தில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இது உங்களுக்கு மனநிறைவைத் தரும். மேலும், உணவுப் பகுதிகளைப் பராமரிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி அதிக அளவில் சாப்பிடுவதையும் தடுக்கிறது.
வெந்தய நீரை எப்படித் தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1½ கப்
செய்முறை
முதலில் வெந்தய விதைகளை 1½ கப் தண்ணீரில் ஊற வைக்கவும். விதைகளை இரவு முழுவதும் ஊற வைப்பது சிறந்தது.
மறுநாள் காலை, தண்ணீர் மற்றும் வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதிக தீயில் கொதிக்க விடவும்.
இப்போது தீயை மிதமானதாகக் குறைத்து 5-6 நிமிடங்கள் அல்லது 1 கப் தண்ணீர் மட்டும் இருக்கும் வரை கொதிக்க விடவும்.
இப்போது தண்ணீரை வடிகட்டி சிறிது ஆறவிடவும். அதிகபட்ச நன்மைக்காக வெறும் வயிற்றில் சூடாகக் குடிக்கவும்.
நீங்கள் வெந்தய விதைகளை மென்றும் சாப்பிடலாம். ஆனால் அவை மிகவும் கசப்பான சுவை கொண்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அன்றாட உணவில் வெந்தய விதைகளை எவ்வாறு சேர்ப்பது?
உங்கள் குழம்பைத் தயாரிக்கும் போது ½ டீஸ்பூன் வெந்தய விதைகளைச் சேர்க்கலாம். காய்கறி ரெசிபிகளில் நிச்சயம் வெந்தய விதைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
வெந்தய விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதற்கான மற்றொரு வழி, அவற்றைத் தூள் வடிவில் உட்கொள்வது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு கடாயில் சில வெந்தய விதைகளை உலர்த்தி வறுக்கவும். பிறகு, அவற்றை நன்கு அரைத்துப் பொடியாக நறுக்கவும். இந்தப் பொடியைக் காற்றுப் புகாத டப்பாவில் வைத்து, தினமும் ½ தேக்கரண்டி அளவு வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகவும்.
குறிப்பு- வெந்தய விதைகள் இயற்கையில் சூடாக இருப்பதால் சிறிய அளவில் பயன்படுத்த வேண்டும். மேலும், தண்ணீரில் 1 டீஸ்பூன் அளவும் காய்கறிகளில் 1/2 டீஸ்பூன் அளவும் மற்றும் தூள் வடிவில் ½ டீஸ்பூன் அளவும் மட்டுமே வெந்தயத்தைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வெந்தயத்தின் மற்ற ஆரோக்கிய நன்மைகள்
வெந்தய விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இது உடலில் இன்சுலின் எதிர்ப்பை சமாளிக்க உதவுகிறது. மேலும், அவை ஆன்டாக்சிட் ஆக செயல்படுவதன் மூலமும், அமிலத்தன்மையைத் தடுப்பதன் மூலமும் ஏராளமான செரிமான நன்மைகளை வழங்குகின்றன. குடல் புண்கள் உள்ளவர்கள் வெந்தய விதைகளின் தண்ணீரைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது அவர்களுக்கு சற்று கடுமையானதாக இருக்கும்.
இந்த மேஜிக் பானம் உங்கள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது. இதைத் தொடர்ந்து குடிப்பதால் முகப்பரு, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவற்றை குணப்படுத்தலாம் மற்றும் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அவற்றை வலிமையாகவும், பெரியதாகவும் மாற்றும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil