Foods to eat during cold and fever: மாலை நேர சிற்றுண்டியாக அவலில், வெல்லம் மற்றும் பால் கலந்து சாப்பிடலாம். முட்டையுடன் டோஸ்ட் செய்த ரொட்டியும் சாப்பிடலாம்.
Foods to eat during cold and fever: மாலை நேர சிற்றுண்டியாக அவலில், வெல்லம் மற்றும் பால் கலந்து சாப்பிடலாம். முட்டையுடன் டோஸ்ட் செய்த ரொட்டியும் சாப்பிடலாம்.
Fever home remedies, coronavirus fever home remedies, foods to eat during cold and fever, காய்ச்சல், காய்ச்சல் பாட்டி வைத்தியம், கொரோனா காய்ச்சல்
Fever home remedies: பருவ மழை காலத்தில் வரக்கூடிய காய்ச்சல் மற்றும் flu போன்ற நோய்களை விரட்டுவதற்க்கு அல்லது அதை குணப்படுத்துவதற்க்கு உங்களுடைய உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இருமல், சளி மற்றும் காய்ச்சலை போக்க பிரபல ஊட்டச்சத்து நிபுணர் Rujuta Diwekar பகிர்ந்துள்ள பாட்டி வைத்தியம் அல்லது வீட்டு வைத்தியம் குறித்து பார்ப்போம்.
Advertisment
உள்ளூர் பொருட்கள், பருவகால விளைப்பொருட்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் நெய் போன்றவை நமது பாரம்பரிய உணவின் முதுகெலும்பு. குறிப்பாக ஒருவர் பருவமழை காலத்து நோய்கள் அல்லது காய்ச்சலில் இருந்து மீண்டு வரும் சமயங்களில் இவை மிகவும் சிறந்தது, என Diwekar தனது Instagram இடுகையில் எழுதியுள்ளார்.
Advertisment
Advertisements
* நெய், காய்ந்த இஞ்சி பொடி, மஞ்சள், வெல்லம் ஆகியவற்றை கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். இந்த உருண்டைகளை காலையில் வெறும் வயிற்றிலும் இரவு தூங்க செல்வதற்கு முன்பும் உண்ணலாம்.
மஞ்சளில் அடங்கியுள்ள curcumin’ல் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றுக்கான அறிகுறிகளை குறைக்கிறது. வெல்லம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துகிறது. இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன, இவை இறுமலை தணித்து, குமட்டல் போன்ற உணர்வை போக்குகிறது.
* காலை உணவாக ராகி கஞ்சி அல்லது ராகி தோசை சாப்பிடலாம். ராகியில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் antioxidants உள்ளது. அதிக அளவு இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் இதில் அடங்கியுள்ளது.
* முந்திரி பருப்பு மற்றும் வெல்லம் ஆகியவற்றை கலந்து நண்பகல் சிற்றுண்டியாக சாப்பிடலாம். முந்திரியில் அடங்கியுள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் கொழுப்பு சத்து இல்லாததால் இது மனதை அமைதியாக வைத்திருக்கும்.
* மதிய உணவுக்கு தினமும் பாசிப் பருப்பு, சாதம் மற்றும் நெய் சாப்பிடலாம்.
* மாலை நேர சிற்றுண்டியாக அவலில், வெல்லம் மற்றும் பால் கலந்து சாப்பிடலாம். முட்டையுடன் டோஸ்ட் செய்த ரொட்டியும் சாப்பிடலாம். அவலில் probiotic உள்ளது, இது மேல் சுவாசக்குழாய் தொற்று நோய்களைத் தடுக்க உதவுகிறது.
* பருப்பு கிச்சடி (Dal khichdi), அல்லது மீன் மற்றும் சாதத்தை இரவு நேர உணவுக்கு சாப்பிடலாம்.
இதுதவிர இஞ்சி, எலுமிச்சை மற்றும் தேன் கலந்த தேனீரை பகலில் எப்போது வேண்டுமானாலும் அருந்தலாம் என்றும் Diwekar தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil