அத்தி பழ தண்ணீர் உடலுக்கு மிகவும் நல்லது. இந்நிலையில் இதில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. இதில் நார்சத்து இருக்கிறது. இது அதிக நேரம் வயிறு முழுவதும் சாப்பிட்டது போல் உணர்வு கொடுக்கும். மேலும் இது அடிக்கடி ஏற்படும் பசியை குறைக்கும். அத்தி பழ தண்ணீர் வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் ஒட்டு மொத்த உடல் இயக்கத்திற்கு நல்லது. இதனால் உடல் எடை குறையும்.
ஜீரணத்திற்கு உதவும். இதில் நார்சத்து இருப்பதால் வயிற்று செயல்பாடுகளை பார்த்துகொள்ளும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். இது தொடர்பாக நடந்த ஆய்வில், ஜீரண பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த தண்ணீர் குடிப்பதால் ஜீரண பிரச்சனை ஏற்படாமல் முற்றிலும் தடுக்கப்படும்.
இதில் ரத்த சர்க்கரையை குறைக்கும் பண்புகள் உள்ளது. ரத்ததில் உள்ள சர்க்கரையை மெதுவாக உள்வாங்கிக்கொள்ள வைக்கிறது. இதனால் சர்க்கரை அளவு அதிகமாக அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீர் குடிக்கலாம்.
பொட்டாஷியம் இதில் இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உயர் ரத்த அழுத்தம் இருந்தால் இதய நோய் ஏற்படும். அத்தி பழ தண்ணீரில் உள்ள பொட்டாஷியம், ரத்த அழுத்த அளவை சீராக பார்த்துகொள்ள உதவும். இதனால் மாரடைப்பு, ஸ்டோக் ஏற்படாமல் தடுக்கும்.
வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொற்று நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.
அத்தி பழ நீர் எப்படி செய்வது
2 அத்தி பழங்களை இரவில் ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் இதை வடிகட்டி தண்ணீரை குடிக்க வேண்டும்.