/tamil-ie/media/media_files/uploads/2020/11/202010251645240199_Tamil_News_Chief-Minister-Edappadi-Palanisami-inquired-about-DuraiKannu_SECVPF-3.jpg)
filter coffe tamil filter coffe making in tamil
filter coffe tamil filter coffe making in tamil : சாதாரண காபியைவிட ஃபில்டர் காபியின் நறுமணமும், சுவையும் அடடே பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்ல வைக்கும்.. ஃபில்டர் காஃபி, தென்னிந்தியாவின் கலாச்சார அடையாளங்களில் ஒன்று. வாசம் வீசும் தூய்மையான காஃபித் தூளின் நற்குணங்களை சுடுநீர் கிரகித்துச் சொட்டி வரும் டிகாக்ஷனை, கறந்த பாலில் கலந்து அரைச் சர்க்கரையுடன் இனிப்பும் கசப்புமாய் சுடச்சுட அருந்தும் அந்த இன்பத்திற்கு ஈடு இணை ஏது!
இப்போ ஃபில்டர் காபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாமா.
தேவையான பொருள்கள்
பால் – 1/2 லிட்டர்
காப்பித்தூள் – 4 மேஜைக்கரண்டி
காபி பில்டர் சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை :
பில்டரின் மேல் பாகத்தில் 1/2 மேஜைக்கரண்டி சர்க்கரை மற்றும் 4 மேஜைக்கரண்டி காப்பித்தூளை போட்டு நன்றாக அமுக்கிவிடவும். ஒரு கப் ( 200 மில்லி ) தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து காப்பித்தூளின் மேல் மெதுவாக ஊற்றவும். 15 நிமிடங்களில் பில்டரின் கீழ் பாகத்தில் டிகாஷன் இறங்கி விடும்.
பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். 150 மில்லி பால், 25 மில்லி டிகாஷன் என்ற அளவில் கலந்து தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து நுரை வர ஆற்றி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.