தென்னிந்திய வீடுகளில் மணக்கும் ஃபில்டர் காஃபி… இந்த ரகசியத்தை வெளில சொல்லிடாதீங்க!

Kumbakonam Degree Coffee in tamil: நம்முடைய வீடுகளில் மணக்கும் அதே சுவையில் எப்படி ஃபில்டர் காஃபி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

Filter Coffee in Tamil: How to make South Indian Filter Coffee tamil

Filter Coffee in Tamil: தென்னிந்தியாவில் ஃபில்டர் காஃபி குறித்து அறியாதவர்களே இருக்க முடியாது. அதிலும் கும்பகோணம் ஃபில்டர் காஃபி என்றால் எட்டுத் திக்கும் பிரபலம் தான். ஆனால் இந்த ஃபில்டர் காஃபியை தயார் செய்வதில் நம்மில் சிலர் சிரம படுகிறார்கள். இதற்கு காரணமாக அவர்கள் குறிப்பிடுவது டிகாஷன் மற்றும் பால் மிக்ஸ் செய்யும் விகிதம் தான்.

இந்த விகிதத்தில் ஏற்படும் பிரச்சனைகளை களையவும், நம்முடைய வீடுகளில் மணக்கும் அதே சுவையில் எப்படி ஃபில்டர் காஃபி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

காஃபி தூள் – 3 ஸ்பூன்
பால்
சர்க்கரை

நீங்கள் செய்ய வேண்டியவை

ஃபில்டர் காஃபி செய்ய முதலில் நாம் செய்ய வேண்டியது சுடு தண்ணீர் கொதிக்க வைப்பது தான். எனவே ஒரு கப் சுடு தண்ணீர் தனியாக ஒரு அடுப்பில் கொதிக்க வைப்போம்.

இதற்கிடையே, ஒரு காஃபி ஃபில்டர் எடுத்து அதில் 3 ஸ்பூன் காஃபி தூள் சேர்த்து ஃபில்டரை அதன் மீது வைக்கவும். இப்போது நன்கு கொதிக்க வைத்துள்ள சுடு தண்ணியை அதில் பாதியளவு ஊற்றவும். அதிகமாக நாம் தண்ணீர் சேர்த்தல் டிகாஷன் ஸ்ட்ராங்காக இருக்காது.

பிறகு ஒரு பாத்திரம் எடுத்து அதில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும். கொதித்து இறக்கிய பின்னர், சில்வர் டம்ப்ளர் அல்லது ஒரு டம்ளர் எடுத்து அதில் முதலில் சர்க்கரையை இடவும். அதன் பின்னர் டிகாஷன் சேர்த்து பால் சேர்க்கவும். ஸ்ட்ராங்காக வேண்டும் என்றால் டிகாஷனை அதிகமாகவும், ஸ்ட்ராங் கம்மியாக வேண்டும் என்றால் டிகாஷன் குறைவாகவும் சேர்க்கவும்.

ஒருவேளை உங்களிடம் காஃபி கொட்டைகள் இருந்தால் அவற்றை மிக்சியில் இட்டு அரைத்து இதே போல் காஃபி தயாரித்து சுவைக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Filter coffee in tamil how to make south indian filter coffee tamil

Next Story
தனுஷ் படத்தில் அறிமுகம்… சீரியலில் சன் டிவி என்ட்ரி.. திருமகள் நடிகையின் திரைப்பயணம்actress janaki devi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com