சிவகங்கையில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நியூஸ் பேப்பரில் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்கள் விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ.1,000 அபராதம் விதித்துள்ளனர்.
அச்சு மையில் காரீயம் இருப்பதால், நியூஸ் பேப்பரில் உணவுப்பொருட்களை பேக்கிங் செய்வது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடும் என்பதால், இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இதுபோன்று விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்நடவடிக்கை கடுமையாக அமல்படுத்தப்படும் எனவும், உணவக உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.