விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. இதில், சீசன் 1இல் மலர்விழி வெற்றிவேல் வேடத்தில் நடித்த நடிகை பவித்ரா ஜனனிக்கு, இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் புகழையும், ரசிகர்களையும் தேடித் தந்தது.
இந்த சீரியலைத் தொடர்ந்து தற்போது பவித்ரா, தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபிநயா என்னும் கேரக்டரில் நடிக்கிறார். அதில் இவருக்கு ஜோடியாக சுந்தரி நீயும், சுந்தரன் நானும் சீரியல் புகழ் வினோத்பாபு நடிக்கிறார்.
விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இதில், அபி, வெற்றியின் கெமிஸ்ட்ரி பார்க்க சூப்பராக இருக்கிறது. இதில் வெற்றியாக நடிக்கும் வினோத் பாபு, சினிமாவில் ஹீரோவாக நடிக்கலாம். அந்தளவுக்கு நடிக்கிறாரா? இல்லை வாழ்கிறாரா என தெரியவில்லை. அவ்வளவு யதார்த்தமாக வினோத் நடிப்பு இருக்கிறது. பவித்ராவும் அதே போலத்தான்..
குறிப்பாக சினிமாவுக்கு எந்த வகையிலும், குறையாமல் சீன்கள் இருப்பதால்’ ரசிகர்கள் இந்த சீரியலை மிகவும் பாராட்டி கமெண்ட்களை தெறிக்க விடுகின்றனர். அத்துடன் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் விருதுகள் விழாவில், இந்த சீரியல் ஹீரோயின் பவித்ரா ஜனனிக்கு, சிறந்த பெர்மாருக்கான விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் பவித்ரா ஜனனி’ இப்போது இன்ஸ்டாவில் பகிர்ந்த படம் செம வைரலாகி வருகிறது.

அதில் பிரமாண்டமான கார்டிலியா சொகுசு கப்பலின் முன், ஷார்ட்ஸ், ஷர்ட் உடன், ஒய்யாரமாக பவித்ரா போஸ் கொடுத்துள்ளார். இதுவரை புடவை, சுடிதார் என ஹோம்லி லுக்கில் மட்டுமே பவித்ராவை பார்த்த ரசிகர்கள், அவரது இந்த படத்துக்கு லைக்ஸை தெறிக்கவிடுகின்றனர்.
சமீபத்தில் விஜே மணிமேகலை, ஷிவாங்கி, ஸ்ரூதிகா ஆகியோர் இந்த சொகுசு கப்பலில் பயணம் செய்த வீடியோவை யூடியூபில் பகிர்ந்தனர். அது பயங்கர வைரலானது.
இந்நிலையில் இப்போது, பவித்ரா ஜனனியும் இந்த கப்பலில் சுற்றுலா சென்ற படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இது என்ன சொகுசு கப்பல் தெரியுமா?
தமிழ்நாட்டில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொசுகு கப்பல் திட்டம் சென்னையில் சமீபத்தில் தொடங்கப்பட்டது. கார்டிலியா’ என்ற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை செயல்படுத்துகிறது.
சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வரையில் 2 நாள் சுற்றுலா திட்டம் மற்றும் சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரிக்கு சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலாத் திட்டம் என இரண்டு பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்படுகிறது.
என்ன! நீங்களும் சொகுசு கப்பல்ல டூர் போக ரெடி ஆகிட்டீங்களா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“