பிரபல செஃபி தாமு செய்த கிராமத்து ஸ்டைல் அரைச்சு வச்ச மீன் குழம்பு ரெசிபி செய்வது குறித்து பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
மீன் பூண்டு தேங்காய் சீரகம் வெங்காயம் கொத்துமல்லி தழை தக்காளி கடுகு காய்ந்த மிளகாய் பெருஞ்சீரகம் புளி கரைசல் எண்ணெய் கறிவேப்பிலை பச்சை மிளகாய் மிளகாய் தூள் கொத்தமல்லி தூள் மஞ்சள் தூள் உப்பு வெந்தயம்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி பின் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி வெங்காயம் போட்டு வதக்ககவும். அடுத்து தக்காளி, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியாத் தூள் சேர்த்து அரைச்சு வச்ச மசாலா போடவும். அரைச்சு வச்ச மசாலா செய்ய தேங்காய், காய்ந்த மிளகாய், பூண்டு போட்டு அரைத்து எடுக்கவும்.
இப்போது மசாலா சேர்த்த பின் தண்ணீர், கொஞ்சம் புளி கரைச்சல் ஊற்றவும். மீனை பாத்திரத்தில் எடுத்து கொஞ்சம் உப்பு, மசாலா புளி தண்ணீர் சேர்த்து கலக்கவும். இப்போது மீனை குழம்பில் போடவும். அவ்வளவு தான் சுவை அள்ளும் மீன் குழம்பு ரெடி. இப்படியே மீனுக்கு பதில் கத்திரிக்காய், முருங்கக்காய் போட்டு செய்தால் சைவ பிரியர்களுக்கு சூப்பரான குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“