தாய்ப்பால் அதிகம் சுரக்க… இதை சாப்பிடுங்க; டாக்டர் சிவராமன்

மீன் உணவு அதிகம் சாப்பிடுவது புரசச் சத்து அதிகரிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் என சித்த மருத்துவர் சிவராமன் கூறினார்.

மீன் உணவு அதிகம் சாப்பிடுவது புரசச் சத்து அதிகரிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் என சித்த மருத்துவர் சிவராமன் கூறினார்.

author-image
WebDesk
New Update
fish

மீன் உணவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சித்த மருத்துவர் சிவராமன் பேசியுள்ளார். குறிப்பாக பால் ஊட்டும் தாய்மார்களுக்கு மீன் மிகுவும் நல்லது எனக் கூறியுள்ளார். அவர் பேசுகையில், "நிறைய மருத்துவ குணம் உள்ள மற்றும் எளிதாக கிடைக்க கூடிய உணவு மீன். பாராம்பரிய மருத்துவத்தில் மீன்களின் சிறப்பு பற்றி கூறியுள்ளனர். புத்திசாலி குழந்தைகளாக இருக்க வேண்டும், நோய் எதிர்ப்பு ஆற்றல் உடன், அடிக்கடி சளி  இருக்க வேண்டும் எனபது தான் பெற்றோர்கள் ஆசை.

Advertisment

இதை செய்யக் கூடிய உணவு மீன். பொதுவாக  நோய் எதிர்ப்பு ஆற்றல் உடன் இருக்க வேண்டும் என்றால் புரதத் சத்து அதிகம் தேவை. அந்த வகையில்  புரதச் சத்திற்கு மீன்கள்  அதிகம் தேவை. 

 ஓமேகா 3, 6 கொழுப்பு அமிலங்கள் மீன்களில் தான் கிடைக்கிறது. இதுபற்றி ஏராளமான ஆய்வுகள் செய்யப்ட்டுள்ளது.பல நாள்பட்ட நோய்கள் சர்க்கரை, ரத்த கொதிப்பு, புற்றுநோய் தொடர்பான சிகிச்சை எடுக்கும் போது நிறைய ஆன்டி- ஆக்சிடென்ட் தேவை. இதற்கு எல்லாம்  ஓமேகா 3, 6 ஆன்டி- ஆக்சிடென்ட் அவசியமாக உள்ளது. 

Advertisment
Advertisements

மாதத்திற்கு3-4 முறையாவது மீன் சாப்பிட வேண்டும்.  அதிக கொழுப்பு இல்லாத உணவாகவும் மீன் உள்ளது. மீன்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு நல்லதோ அதே அளவு கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு நல்லது. குறிப்பாகல் பால் ஊட்டும் தாய்மார்களுக்கு அதிக புரசத் சத்து தேவை. மீன் சாப்பிடுவது தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.  பால் ஊட்டும் தாய்மார்கள் வாரம் 2 முறை சுரா புட்டு சாப்பிடலாம்" என்று கூறினார்.  

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: