ஃபிட்னஸ் வீடியோ : ஜெயித்தது மோடியா? நெட்டிசன்களா?

பிரதமர் மோடி இன்று காலை ஃபிட்னஸ் வீடியோ ஒன்றைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்று இன்று இந்த வீடியோவை வெளியிட்டார் மோடி.

இந்த வீடியோவில் மோடி அவர்கள் கார்டன் ஒன்றில் உடற்பயிற்சி செய்கிறார். அங்குள்ள பெரிய கல் மீது படுத்துக்கொண்டு யோகா செய்யும் அவர், அழகுக்காக வைக்கப்பட்டிருந்த கற்களையும் விட்டு வைக்கவில்லை. கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு ரேம்ப் வாக் கூட செய்கிறார் மோடி என்று நெட்டிசன்கள் இணையத்தளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

பொதுவாகவே எது கிடைத்தாலும் மீம்ஸ் போட டெம்பிளேட் கிடைத்துவிட்டது என்று நினைக்கும் நெட்டிசன்கள் மத்தியில் முதலில் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தவர் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

×Close
×Close