ஓட வேண்டாம்.. ஜிம் தேவையில்லை.. உங்கள் சொந்த உடல் எடை மட்டும் போதும் இந்த உடற்பயிற்சிகளை செய்வதற்கு!

ஓடுவது தவிர, உங்கள் இதயத்தை புதுப்பிக்க மற்றொரு வழி இங்கே உள்ளது. ஃபிட்னெஸ் பயிற்சியாளர் பகிரும் உடற்பயிற்சி டிப்ஸ்!

ஃபிட்னெஸ் என்பது பழக்க-வழக்கங்களை மட்டும் பின்பற்றுவது மட்டுமல்ல. உடலின் தேவைகளைப் புரிந்துகொள்வதும், அதற்கேற்ப வொர்க்-அவுட்டைத் திட்டமிடுவதும் பற்றியது.

உடற்பயிற்சி என்பது வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கிறது. பலர் ஓடுவதை விரும்புகின்றனர், மற்றவர்கள் நடைபயிற்சி அல்லது ஜிம்மிற்கு செல்ல விரும்புகிறார்கள். அப்படித்தான் ஃபிட்னெஸ் பயிற்சியாளர் கெய்லா இட்சைன்ஸ் இன்ஸ்டாகிராமில் ” எனக்கு ஓடுவதில் மகிழ்ச்சி இல்லை” என்பதை பகிர்ந்து கொண்டார்.

நீங்கள் ஏற்கெனவே என்னை பின் தொடர்பவர்கள் என்றால் நான் ஓடமாட்டேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். எதுவாக இருந்தாலும் ஓடுவதில் எனக்கு நிம்மதியில்லை. மாறாக நான் வேகமாக நடப்பதையே விரும்புகிறேன், மக்களுக்கு ஓடுவது எப்படி சுவாரஸ்யமாக இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, அதேபோல, பர்பிகளை (burpees – ஒருவகையான உடற்பயிற்சி) நான் எப்படி சுவாரஸ்யமாக காண்கிறேன் என்பதை பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்வதில்லை என அவர் கூறினார்.

சில சமயங்களில் நீங்கள் வீட்டுக்குள்ளே இருக்கவேண்டிய நிலை வரலாம் அல்லது வானிலை மோசமானதாக இருக்கலாம். எனவே உங்கள் இதயத்துக்கு ஒரு மாற்றுவழி தேவை. எனவே, ஓட்டப்பயிற்சி இல்லாமல், நாள் முழுவதும் உங்கள் இதயத்தை ஆக்டிவ்வாக வைத்திருக்க மற்றொரு வழி உள்ளது.

எந்த உபகரணத்தின் உதவியும் இல்லாமல், உங்கள் சொந்த உடல் எடையைப் பயன்படுத்தி வீட்டில் செய்யக்கூடிய இந்த கார்டியோ பயிற்சியை செய்து பாருங்கள்.

*க்ரிஸ் கிராஸ் – Criss Cross

*ஹை நீஸ் – High Knees

*பாப் ஸ்க்வாட் மற்றும் ட்விஸ்ட் Pop Squat and Twist

*மெளண்டன் கிளிம்பர்ஸ்Mountain Climbers-

*ஹாஃப் பர்பி – Half Burpee

*அப் பைக்ஸ் – Ab Bikes

*ரெஸ்ட் – Rest

ஒவ்வொன்றையும் 30 வினாடிகள், மூன்று சுற்றுகளுக்கு செய்யவும்.

கார்டியோ எவ்வாறு உதவுகிறது?

எடை இழப்பு, இயக்கம், மூட்டுகளில் பலவிதமான இயக்கத்திற்கு கார்டியோ உதவுவதாக அறியப்படுகிறது.

இது இதயத்தை வலுப்படுத்தவும், நுரையீரல் திறனை மேம்படுத்தவும், இயற்கையாகவே ஆற்றல் அளவை அதிகரிக்கவும், தூக்கத்தை தூண்டவும் உதவுகிறது.

நீங்கள் ஆரோக்கியமாகவும் நீண்ட காலம் வாழவும் கார்டியோ பயிற்சி உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Fitness trainer shares about no equipment cardio workout

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com