/indian-express-tamil/media/media_files/2025/02/04/6ntUjM4L6rLBCxo2RwQ3.jpg)
மெனோபாஸ் என்பது ஒரு தனிப்பட்ட மனித அனுபவமாகவே கருதப்படுகிறது. ஆனால் பல உயிரினங்களும் இந்த குறிப்பிடத்தக்க வாழ்க்கை மாற்றத்திற்கு உட்படுகின்றன. இதன் பின்னணியில் இருக்கும் பரிணாம காரணங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 5 animals that experience menopause
மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கும் ஐந்து விலங்குகளின் பட்டியல் இங்கே உள்ளது. அவற்றை தற்போது காண்போம்.
1. ஓர்கா மீன்கள் (Orcas)
நாம் அறிந்தவை: மாதவிடாய் குறித்து அதிகம் ஆய்வு செய்யப்பட்ட உயிரினங்களில் ஓர்கா மீன்கள் ஒன்றாகும். பெண் ஓர்காக்கள் தங்கள் இனப்பெருக்க ஆண்டுகளுக்குப் பிறகு பல தசாப்தங்களாக வாழும். தங்கள் பேரக்குழந்தைகளை வளர்க்க இவை உதவுகின்றன.
இது ஏன் முக்கியமானது: இந்த நீட்டிக்கப்பட்ட ஆயுட்காலம், ஓர்கா வகை மீன்களின் சமூக அமைப்பு மற்றும் உயிர்வாழ்வதில் பங்களிக்க அனுமதிக்கிறது. இவை மதிப்புமிக்க அறிவையும், ஆதரவையும் தன் இனத்திற்கு வழங்குகிறன.
2. ஷார்ட்-ஃபின்ட் பைலட் திமிங்கலங்கள் (Short-Finned Pilot Whales)
நமக்குத் தெரிந்தவை: ஓர்கா மீன்களை போலவே, இந்த வகை திமிங்கலமும் மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கின்றன. இவை தங்கள் இனப்பெருக்க ஆண்டுகளை விட நீண்ட காலம் வாழ்கின்றன.
இது ஏன் முக்கியமானது: இனப்பெருக்கத்திற்குப் பிந்தைய கட்டம் இந்த திமிங்கலம், அதன் சந்ததியினரைப் பராமரிப்பதில் உதவுகின்றன.
3. பெலுகா திமிங்கலம் (Beluga Whales)
நமக்குத் தெரிந்தவை: பெலுகா திமிங்கலமும் மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கின்றது என்பதை சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது, தனித்துவமான பண்பு கொண்ட உயிரினங்களின் பட்டியலில் அவற்றை சேர்க்கின்றன.
இது ஏன் முக்கியமானது: இனப்பெருக்க வயதுக்கு அப்பால் வாழும் இந்த மீனகள், அதன் திறன்களை தான் சார்ந்து இருக்கும் குழுக்களுக்கு வழங்குகிறது.
4. நார்வால் திமிங்கலம் (Narwhals)
நமக்குத் தெரிந்தவை: நார்வால்களும் மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இது புதிதாக இடம்பெற்றுள்ளது.
இது ஏன் முக்கியமானது: மற்ற பல திமிங்கலத்தைப் போலவே, நார்வால்களும் தங்கள் குழுக்களின் இளைய உறுப்பினர்களை வழிநடத்த உதவுகின்றன.
5. சிம்பன்சிகள் (Chimpanzees)
நமக்குத் தெரிந்தவை: பெண் சிம்பன்ஸிகள் இனப்பெருக்கம் செய்வதை நிறுத்திய பிறகு, மாதவிடாய் நிறுத்தத்திற்கு உள்ளாகி பல ஆண்டுகள் வாழ்கின்றன என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
இது ஏன் முக்கியமானது: இது அவற்றின் சமூகங்களில் ஒரு முக்கிய பங்கை வகிக்க அனுமதிக்கிறது. அடுத்த சந்ததியுடன் அறிவையும், வளங்களையும் பகிர்ந்து கொள்ள சிம்பன்சிகள் உதவி செய்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.