Advertisment

இரத்த அழுத்தத்தை குறைக்க 5 எளிய இயற்கை வைத்தியம்!

இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன. அதில் மருந்து என்பது ஒரு வழி, மற்றவை நீண்ட காலத்திற்கு அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் இயற்கை வைத்தியம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Five home remedies to lower blood pressure naturally

Five home remedies to lower blood pressure naturally

உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர்டென்ஷன் என்பது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு ஆபத்தான நிலை. தமனிகளின் சுவருக்கு எதிரான இரத்த அழுத்தம்’ ஆபத்தான நிலைக்கு உயரும் நிலை இது. இது காலப்போக்கில் இதயத்தை சேதப்படுத்தும் மற்றும் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

Advertisment

ஒருமுறை கண்டறியப்பட்டால், நிலைமையை சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடக்கூடாது, இல்லையெனில் அது ஆபத்தானதாக மாறும். அதிர்ஷ்டவசமாக, இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன. அதில் மருந்து என்பது ஒரு வழி, மற்றவை நீண்ட காலத்திற்கு அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் இயற்கை வைத்தியம். உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த 5 வழிகள் உள்ளன.

உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்

அதிகப்படியான உப்பு உட்கொள்வதோடு’ உயர் இரத்த அழுத்தத்தையும் பல ஆய்வுகள் இணைத்துள்ளன. பக்கவாதத்திற்கு சோடியமும் ஒரு காரணமாக இருக்கலாம். சோடியம் உட்கொள்ளும் தினசரி அளவில் ஒரு சிறிய குறைப்பு கூட உயர் இரத்த அழுத்தம் விஷயத்தில், அழுத்தத்தை 5 முதல் 6 mm Hg வரை குறைக்கலாம். சோடியம் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பொதுவாக, மக்கள் ஆரோக்கியமாக இருக்க உப்பு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும். சாதாரண நபர்கள் ஒரு நாளில் 2,300 மில்லிகிராம் உப்புக்கு மேல் இருக்கக்கூடாது.

பொட்டாசியம் உட்கொள்ளலை அதிகரிக்கவும்

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பொட்டாசியம் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். சிறிய அளவில் உடலுக்குத் தேவைப்படும் இந்த ட்ரேஸ் மினரல், அதிகப்படியான சோடியத்தை அகற்றவும், இரத்த நாளங்களில் அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகள் பெரும்பாலும் சோடியம் நிறைந்தவை மற்றும் அதை சமநிலைப்படுத்த நீங்கள் உணவில் அதிக பொட்டாசியம் நிறைந்த உணவை சேர்க்க வேண்டும். நீங்கள் சேர்க்கக்கூடிய சில உணவுகள் இங்கே:

காய்கறிகள்: இலை கீரைகள், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு

பழங்கள்: முலாம்பழம், வாழைப்பழங்கள், அவகடோ, ஆரஞ்சு மற்றும் ஆப்ரிகாட்

மற்றவை: கொட்டைகள் nuts மற்றும் விதைகள், பால், தயிர், சூரை மீன் மற்றும் சால்மன்

தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்

ஒவ்வொரு நபருக்கும் வழக்கமான உடற்பயிற்சி முக்கியமானது. ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமாக இருக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் 30 முதல் 45 நிமிடங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இது மிகவும் அவசியம். வழக்கமான உடற்பயிற்சி உங்கள் இதயத்தை வலிமையாக்குகிறது, இரத்தத்தை மிகவும் திறமையாக பம்ப் செய்ய உதவுகிறது மற்றும் தமனிகளில் அழுத்தத்தைக் குறைக்கிறது. தினமும் 40 நிமிடங்கள் நடந்தாலே போதும், ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

மது அருந்துவதைக் கட்டுப்படுத்தவும், புகைபிடிப்பதை நிறுத்தவும்

சிகரெட் மற்றும் ஆல்கஹால் இரண்டும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். உலகெங்கிலும் உள்ள உயர் இரத்த அழுத்த வழக்குகளில் 16 சதவீதத்திற்கு ஆல்கஹால் காரணம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. ஆல்கஹால் மற்றும் நிகோடின் இரண்டும் இரத்த அழுத்த அளவை தற்காலிகமாக அதிகரித்து இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இரண்டு விஷயங்களும் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால். நன்மைக்காக ஒருமுறை அவற்றை விட்டுவிடுவது நல்லது.

ரீஃபைண்ட் கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கவும்

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் உணவுகளில் சேர்க்கப்பட்ட சர்க்கரையும் கூட உயர் இரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கும் என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு உணவுப் பொருட்களையும் உட்கொள்வதைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தின் அளவை இயற்கையாகக் கட்டுப்படுத்தலாம். ரொட்டி மற்றும் வெள்ளை சர்க்கரை போன்ற உணவுகள் உங்கள் இரத்த ஓட்டத்தில் விரைவாக சர்க்கரையாக மாறி பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிலோவைக் குறைக்க குறைந்த கார்ப் உணவைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். சுத்திகரிக்கப்பட்ட மாவுக்குப் பதிலாக முழு தானியங்கள் மற்றும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் அல்லது தேன் சேர்க்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment