Advertisment

தேன், பால், மஞ்சள் போதும்.. சருமத்தின் உட்புற பளபளப்பை மீட்டெடுப்பது எப்படி?

உங்கள் சருமத்தின் உட்புற பளபளப்பைக் கொண்டு வரக்கூடிய டாப் 5 கிச்சன் பொருட்களின் பட்டியல் இதோ!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Beauty Tips in Tamil

Five Kitchen ingredients can bring healthy glow to the skin naturally

நமது சருமம் தான், நமது சிறந்த நண்பன், கருப்போ, சிவப்போ இல்லை மாநிறமோ, நம் சருமத்தை முதலில் நாம் நேசிக்க வேண்டும். தோல் நிறம் எதுவாக இருந்தாலும், அதன் அமைப்புதான் முக்கியம். தெளிவான, பளபளப்பான மற்றும் கறை இல்லாத சருமத்தை யார்தான் விரும்பவில்லை?

Advertisment

நமது சமையலறையில் இயற்கையாகவே சருமத்திற்கு ஆரோக்கியமான பொலிவைத் தரும் பல்வேறு பொருட்கள் உள்ளன. இந்த பொருட்கள் சருமத்தை எக்ஸ்ஃபாலியேட்டிங், மாய்ஸ்சரைசிங், பிரைட்னிங், ஸ்மூதினிங் செய்யும் அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளன.

உங்கள் சருமத்தின் உட்புற பளபளப்பைக் கொண்டு வரக்கூடிய டாப் 5 கிச்சன் பொருட்களின் பட்டியல் இதோ!

தேன்

publive-image

தேன் நமது சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசர். இதை ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம் அல்லது மாய்ஸ்சரைசராக சருமத்தில் மசாஜ் செய்யலாம்.

நீங்கள் தேனை’ பப்பாளி, வாழைப்பழம் அல்லது புதிய ஆரஞ்சு சாறுடன் சேர்த்து ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம் அல்லது தேனுடன் சில எலுமிச்சைத் துளிகள் கலந்து, அதை மாய்ஸ்சரைசராக அப்ளை செய்யலாம். இதைத் தொடர்ந்து செய்வதால், உங்கள் சருமம் பளபளப்பாகவும், பொலிவுடனும் மாறும்!

பால்

publive-image

பச்சைப் பாலில் எல்லாம் இருக்கிறது. காட்டன் பஞ்சை’ ஒரு டேபிள் ஸ்பூன் பச்சைப் பாலில் நனைத்து, அதைக் கொண்டு உங்கள் முகத்தைச் சுத்தப்படுத்தவும்.

இது ஒரு இயற்கையான க்ளென்சர், உங்கள் சருமத்தை கறை இல்லாமல் பிரகாசமாக்கும். இதை தினமும் காலை குளிக்கும் முன் பயன்படுத்தலாம். இரவில் கூட, அனைத்து அழுக்குகளை அகற்ற பயன்படுத்தலாம். இது சிறந்த பளபளப்பான சருமத்தை தருகிறது.

தயிர்

publive-image

தயிர் வயதானதை தடுக்கும் தன்மை கொண்டது. தயிரை வழக்கமாகப் பயன்படுத்துவதால், சருமத்தில் உள்ள ஹைட்ரேட் மற்றும் ஈரப்பதத்தை நீக்கி, கறை இல்லாமல் இளமையுடன் இருக்கும்.

இது தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் முகத்துக்கு ஈவன் டோன் அளிக்கிறது. தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் மற்றும் சில ப்ளீச்சிங் ஏஜெண்டுகள்’ சருமத்திற்கு அற்புதமான பலன்களைத் தருகிறது.

மஞ்சள்

publive-image

மஞ்சள் நம் சருமத்துக்கு ஒரு வரம் போன்றது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், சருமத்திற்கு பளபளப்பு மற்றும் பொலிவை அளிக்கிறது.

கடலை மாவு, தயிர் அல்லது பால், மஞ்சள் சேர்த்து மாஸ்க் செய்து, முகத்தில் மெதுவாக மசாஜ் செய்து சில நிமிடங்கள் கழித்து கழுவினால், பயனுள்ளதாக இருக்கும்.

கற்றாழை

publive-image

கற்றாழை ஒரு அதிசய செடி. இது ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் மிகப்பெரிய நன்மைகளைக் கொண்டுள்ளது. கற்றாழை சந்தையில் கிடைக்கிறது என்றாலும், உங்கள் தோட்டத்தில் கிடைக்கும் புதிய கற்றாழையை விட சிறந்தது எதுவுமில்லை.

இது சூரிய ஒளியில் இருந்து எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றுவது மட்டுமல்லாமல், சரும செல்களை சரிசெய்யும் கொலாஜனையும் கொண்டுள்ளது.

இந்த 5 பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி, உங்கள் சருமத்தின் உட்புறப் பளபளப்பைக் கொண்டு வாருங்கள்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment