பண்டிகை சீசன் வந்துவிட்டது, நீங்கள் நிறைய பார்ட்டிகள் மற்றும் கெட்-டு-கெதர்களில் பங்கேற்க காத்திருக்க வேண்டும். இருப்பினும், நிறைய வேலைகள் இருப்பதால், அந்த கவர்ச்சியான, சரியான தோற்றத்தை அடைய ஒவ்வொரு நாளும் சலூன்களுக்குச் செல்ல உங்களுக்கு போதுமான நேரம் இருக்காது.
இந்த பண்டிகைக் காலத்தில்’ நீங்கள் சிரமமின்றி தனித்து நிற்பதற்கான சில அழகுக் குறிப்புகளை பகிர்ந்து கொள்ள’ தொழில்முறை மேக்கப் கலைஞர்கள் இங்கு வந்துள்ளனர்.
பியா அரோரா (Piya Arora), ஒரு தொழில்முறை மேக்கப் கலைஞர் மற்றும் இன்ஃப்ளூயன்சர், எளிமையான இந்திய பியூட்டி ஹேக்குகள் திருவிழாக்களுக்கு சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறார்.
காஜல் அணியுங்கள், அது உங்களை அழகாக இருக்கிறது. பொட்டு, வளையல்கள், மெஹந்தி... இந்த அடிப்படை இந்திய விஷயங்கள் உங்கள் அழகை சிரமமின்றி மேம்படுத்தும். ஆடைகளைப் பொறுத்தவரை, நீங்கள் உங்கள் அம்மா அல்லது பாட்டியின் புடவைகளை எடுத்து அவற்றை மறுவடிவமைக்கலாம்" என்று பியா கூறுகிறார்.
சிகையலங்காரத்திற்காக, "நீங்கள் உங்கள் தலைமுடியை ஒரு கொண்டை போட்டு’ அதில் பூக்களை வைக்கலாம். வெள்ளை அல்லது சிவப்பு ரோஜாக்கள் எப்பொழுதும் பிரமிக்க வைக்கின்றன அல்லது உங்கள் அலங்காரத்தின் நிறத்துடன் பொருந்தக்கூடிய எந்த பூவையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
இந்திய ஆடைகள் மற்றும் நகைகள் பொதுவாக கனமானதாக இருப்பதால், எளிமையான, நுட்பமான மேக்-அப்புக்கு செல்லுமாறு பியா பரிந்துரைத்தார். நீங்கள் கனமான ஆபரணங்களை அணிந்திருந்தால், நியூட் மேக்கப் ஷேட்ஸ்-- ஆரஞ்சு, பீச் நிறங்களில் உங்கள் ஆடையை முழுமையாக்க வேண்டும்.
நீங்கள் இலகுவான ஆடைகளைத் தேர்வுசெய்து, கனமான நகைகளைத் தவிர்த்தால், நீங்கள் அடர் சிவப்பு அல்லது மெரூன் நிற லிப்ஸ்டிக் உதடுகளுடன் தனித்து நிற்கலாம்," என்று அவர் கூறினார்.
தொழில்முறை மேக்கப் கலைஞரும், கல்வியாளருமான வாமிகா பஜாஜ், ஒரு சரியான தோற்றத்தை அடைய, உங்கள் மேக்கப்பை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பகிர்ந்துள்ளார்.
"குளிர்காலத்தில் டார்க் உதடுகள் மிகவும் அழகாக இருக்கும். எனவே, உங்கள் உதடுகள் போல்ட் (bold) லுக்கில் இருக்க வேண்டுமெனில், கண்களில் இறகு போல மெலிதான ஐ-லைனர் மேக்கப் மட்டும் போதும். இது உங்களை கிளாசி-ஆக காட்டும்.
இதுவே நீங்கள் உங்கள் கண்களை தனியாக காட்ட விரும்பினால், லைட் ஷேட்ஸ் லிப்ஸ்டிக் உபயோகிக்கவும். என்னைப் பொறுத்தவரை, பிரவுன்கள் மற்றும் நியூட் கலர்ஸ் இந்த நேரத்தில் சிறப்பாக செயல்படுகின்றன.
எனவே பழுப்பு, சாம்பல் மற்றும் வார்மர் டோன்களுடன், ஸ்மோக்கி கண்களுக்குள் நுழையுங்கள் என்று அவர் மேலும் கூறினார்.
தங்கள் தோற்றத்தைப் பரிசோதிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு, வாமிகா அவர்களின் கண் மேக்கப்-உடன் விளையாட பரிந்துரைத்தார்.
"பல்வேறு வகையான லைனர்கள் உள்ளன -- கிராஃபிக் லைனர்கள், ஃபாக்ஸ் லைனர்கள், ஏஞ்சல் விங்ஸ், ஸ்மட்ஜ் ஐலைனர்கள் மற்றும் பல. நீங்கள் நகைச்சுவையான, வேடிக்கையான தோற்றத்திற்காக அவற்றை முயற்சி செய்யலாம்," என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
அவசரத்தில் இருப்பவர்களுக்காகவும், கைகளில் நேரமில்லாமல் இருப்பவர்களுக்காகவும், வாமிகா ஒரு அதிவிரைவு மேக்கப் வழக்கத்தைப் பகிர்ந்துள்ளார்.
முதலில் சுத்தப்படுத்துதல், டோனிங், மாய்ஸ்சரைசிங் (CTM செய்யுங்கள்), ஒரு கன்சீலரைப் பயன்படுத்தி, அதை பவுடர் கொண்டு செட் செய்யுங்கள்.
ஃபெளண்டேஷன் தேவையில்லை. அதன் மேல் ஒரு ப்ளஷ், ஹைலைட்டர், லிப்பர், கொஞ்சம் மினுமினுப்பான ஐ ஷேடோ போதும். ஒரு ஸ்ப்ரே அல்லது ஒரு மிஸ்ட் மூலம் அதை செட் செய்யுங்கள். இனி நீங்கள் கிளம்பலாம். இந்த தோற்றத்தை அடைய ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் மட்டுமே ஆகும்," என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
"கூந்தலுக்கு, நேர்த்தியான போனி(pony), மென்மையான பன் அல்லது கர்ல்ஸ் பயன்படுத்துங்கள். இவை அனைத்தும் எளிதான மற்றும் விரைவான ஹேர்-டூஸ். ஒரு சிம்பிளான நெக்லஸ் (choker) அல்லது பெரிய வளைய கம்மல்களை அணியுங்கள். வெள்ளி மற்றும் ஜங்க் நகைகள் இந்த நாட்களில் மிகவும் அழகாக உள்ளன என்று அவர் கூறினார்.
இந்த மேக்கப், முடி மற்றும் ஆடை யோசனைகளைத் தவிர, பியாவும் வாமிகாவும் அந்த சரியான பார்ட்டி தோற்றத்தைப் பெறுவதற்கு மறக்கக்கூடாத சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளனர்.
உங்கள் மேக்கப்பைப் பயன்படுத்துவதற்கு முன் எப்போதும் ப்ரைமரையும், உங்கள் பேஸ்ஸை(base) அமைக்க மேக்கப் ஃபிக்ஸரையும் பயன்படுத்தவும்.
உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருப்பதே உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும். உங்கள் முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், குறிப்பாக இப்போது பருவம் மாறி வருவதால். நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிக்கவும்.
நீங்கள் வீட்டிற்குள் இருக்கும்போது கூட, சன் பிளாக்கை (sunscreen) தவறாமல் பயன்படுத்தவும்.
CTM -- சுத்தம் செய்தல், டோனிங் மற்றும் ஈரப்பதமாக்குதல் ஆகியவை அவசியம் -- நீங்கள் ஒப்பனை செய்வதற்கு முன்னும் பின்னும்.
ஒருபோதும் மேக்கப்பை போட்டுக்கொண்டு தூங்காதீர்கள். இது உங்கள் சரும துளைகளை அடைத்து, அடுத்த நாள் உங்கள் தோல் மோசமாகிவிடும். தோல் பராமரிப்புக்கு உங்களுக்கு போதுமான நேரம் இல்லையென்றால், படுக்கைக்கு முன் உங்கள் மேக்கப்பை அகற்றி, வழக்கமான மாய்ஸ்சரைசரைப் போட்டு, உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள்.
உங்கள் மேக்கப்பை அகற்ற, மேக்கப் ரிமூவிங் வைப்ஸ் ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம், அவை சருமத்தில் மிகவும் கடுமையாக இருக்கும். அதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது மைக்கேலர் தண்ணீரை பயன்படுத்தவும்.
வாமிகா உங்கள் சருமத்தை தொடர்ந்து கவனித்துக் கொள்ள வலியுறுத்தினார், "ஏனெனில் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருந்தால், உங்கள் மேக்கப் தானாகவே அழகாக இருக்கும்."
யாருடைய பாணியையும் நகலெடுப்பதற்குப் பதிலாக, "தனித்துவமான ஒன்றைச் செய்து, உங்களுக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் தோற்றத்தில் நம்பிக்கையுடன் இருங்கள்" என்று பியா பரிந்துரைத்தார்.
இந்த உதவிக்குறிப்புகள் மற்றும் யோசனைகளை மனதில் கொண்டு, நீங்கள் நிச்சயமாக ஆரோக்கியமான சருமம் மற்றும் அழகான தோற்றத்தைப் பெறுவீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.