Advertisment

தாடி வளர்க்க ஆசையா? அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சிக்கோங்க!

Five monsoon grooming skincare beard shaving tips tricks for men Tamil News பொருத்தமான ஆஃப்டர் ஷேவ் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Five monsoon grooming skincare beard shaving tips tricks for men Tamil News

Five monsoon grooming skincare beard shaving tips tricks for men Tamil News

Five monsoon grooming skincare beard shaving tips tricks for men Tamil News : ஒவ்வொரு பருவ நிலை மாறும்போதும், சருமத்தைப் பிரதிபலிக்கும் சில மாற்றங்களும் நிகழும். அந்த வரிசையில் மழைக்காலத்தில் ஈரப்பதத்தின் அதிகரிப்பு ஏராளமான சரும மாற்றத்தைக் கொண்டுவரும். மேலும், நோய்த்தொற்று அபாயத்தின் காரணமாக இன்னும் அதிக கவனத்துடன் சருமத்தைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம்.

Advertisment

பெண்களுக்கான முடி பராமரிப்பு மற்றும் சரும பராமரிப்பு பற்றி நாம் அடிக்கடி பேசும்போது, ​​ஆண்களும் பின்பற்ற வேண்டிய சில சீர்படுத்தும் நடைமுறைகள் உள்ளன. மழை மற்றும் அதிக ஈரப்பதம் ஆண்களின் சரும மற்றும் தாடி, மீசை போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கு மோசமாக இருக்கும். எனவே, அவற்றைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். அதற்கான ஐந்து அத்தியாவசியமான குறிப்புகளை இனி பார்க்கலாம்.

சுத்தமாக ஷேவ் செய்யுங்கள்

சுவாசிக்கக்கூட நேரமில்லாமல் பரபரவென ஓடிக்கொண்டிருப்பவர் என்றால், நிச்சயம் உங்கள் தாடி மற்றும் உடல் ரோமங்களை பராமரிப்பதில் தாமதம் அல்லது சில சமயங்களில் முடியாமல்கூட போகலாம்.  அவர்கள் சுத்தமாக ஷேவ் அல்லது ட்ரிம் செய்துகொள்வது நல்லது. ஆம், மழைக்காலங்களில் நீண்டு வளரும் முடி, தூசி மற்றும் அழுக்கை ஈர்க்கும். இது வியர்வையுடன் கலக்கும்போது, பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, ஷேவ் செய்வது பெஸ்ட்.

பராமரிப்பற்ற தாடி மற்றும் மீசையைத் தவிர்க்கவும்

தாடி வளர்க்க ஆசைப்படும் ஆண்கள், அதனை ஷாம்பூ கொண்டு சுத்தம் செய்து அழுக்கு மற்றும் வியர்வை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். நன்கு சுத்தம் செய்த பிறகு, உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க மென்மையான ஆர்கானிக் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இது தோல் அரிப்பு மற்றும் துர்நாற்றம் வீசுவதிலிருந்து தடுக்கும்.

சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க எஸ்எல்எஸ் இல்லாத ஷேவிங் ஃபோம் அல்லது ஷேவிங் ஜெல்லைப் பயன்படுத்தவும்

எப்போதும் பருவத்திற்கு ஏற்ற மற்றும் எஸ்எல்எஸ் இல்லாத ஷேவிங் பொருட்களை வாங்கவும். தரமான ஷேவிங் ஃபோம் மற்றும் ஷேவிங் ஜெல் உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், சிறந்த மற்றும் நீண்ட கால முடிவுகளை அளிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும், சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துவது சிறந்தது அல்ல. ஒரு நல்ல ஷேவிங் தயாரிப்பு பொருள் உங்கள் சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும்.

ஆல்கஹால் இல்லாத ஆஃப்டர் ஷேவ் அல்லது லோஷன் பயன்படுத்தவும்

ஈரப்பதமான சருமத்தைப் புறக்கணிக்கும் ஆண்கள், அரிப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். ஷேவிங் செய்வதால் உங்கள் சருமம் வறண்டு போகும். ஈரப்பதம் இல்லாததால் சருமம் சேதமாகும். பொருத்தமான ஆஃப்டர் ஷேவ் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆஃப்டர்ஷேவ் லோஷன்கள், வறட்சிக்கு எதிரான முதல் பாதுகாப்பு பொருள்கள்.

publive-image

உங்கள் ஆஃப்டர்ஷேவ் தயாரிப்புகளில் ஆல்கஹால் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். ஆல்கஹால் அடிப்படையிலான மாய்ஸ்சரைசர்கள், சானிடைசர்களைப் போல பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்லும் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த பொருட்கள் நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும். அதற்கு பதிலாக, கற்றாழை, கிரீன் டீ உள்ளிட்ட இயற்கைப் பொருட்களுடன் ஒருங்கிணைந்த ஆர்கானிக் பொருட்களைத் தேர்வு செய்யவும்.

ஷேவிங் செய்வதற்கு Exfoliate முக்கியம்

அதிக ஈரப்பதம் மற்றும் வியர்வை, பெரும்பாலும் எண்ணெய் சருமத்திற்கு வழிவகுக்கும். இது முடியை ஒட்ட வைத்து அவற்றை அகற்றுவதைக் கடினமாக்குகிறது. அதிகப்படியான அசுத்தங்களை அகற்ற, ஷேவிங் செய்வதற்கு முன்பு எப்போதும் எக்ஸ்ஃபோலியேட் செய்யவும். இது இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது மற்றும் ரேஸர்கள் சீராக இயக்குவதற்கு வழிவகுக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fashion Skincare
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment