By: WebDesk
Updated: January 29, 2020, 01:32:25 PM
Five rarest cars price tags, today news, lifestyle news, tamil news, news in Tamil, Tamil Nadu news, இன்றைய செய்திகள், தலைப்பு செய்திகள், பழமையான கார்கள், விண்டேஜ் கார்கள்,
Five rarest cars & price tags : பழைய திரைப்படங்களில் வரும் கார்களை திரைகளில் மட்டுமே பார்த்து ஏங்கிய காலம் எல்லாம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் இந்த கார்களின் அணி வகுப்போ நம்மை பெருமூச்சு விட வைக்கிறது.
Aston Martin DBR1 : 1956ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆஸ்டன் மார்ட்டின் கார்களில் மிக முக்கியமான மாடல் இதுவாகும். மிகவும் அழகான கார்களில் ஒன்றாக இங்கிலாந்தில் கொண்டாடப்பட்டு வரும் கார் வகைகளில் இதுவும் ஒன்று. இதன் இன்றைய நாள் விலை எவ்வளவு தெரியுமா? 22.2 மில்லியன் டாலர்கள். இந்திய விலையில் ரூ. 160 கோடியாகும். 1921 Helica de Leyat : பார்ப்பதற்கு ஒரு விமானத்தைப் போலவே இருக்கும் இந்த கார்களின் மொத்த எண்ணிக்கையே வெறூம் 30 தான். ஒரு மணி நேரத்திற்கு 170 கிலோ மீட்டர் வரை இதில் பயணம் செய்யலாம். இதனுடைய தற்போதைய விலை 20 மில்லியன் டாலர்களாகும். இந்திய விலைப்படி ரூ. 142 கோடியாகும்.
இந்த கார் 1957 Jaguar XKSS… ஜாகுவார் நிறுவனத்தில் வெளியான இந்த வகை கார்களில் இன்னும் 12 கார்கள் செயல்பட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 1950ம் ஆண்டு இந்த காரின் விலை 5000 டாலர்கள் இருந்தது. ஆனால் தற்போது இதன் விலையோ 30 மில்லியன் டாலர்கலாக உள்ளது. இந்திய விலைப்படி ரூ. 213 கோடிகளாகும்.
Ferrari 250 GT : 1962ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஃபெராரி வகை கார்களில் இது மிகவும் முக்கியமான மாடலாகும். மொத்தமாக 39 கார்கள் மட்டுமே இந்த மாடலில் வடிவமைக்கப்பட்டது. இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா? 38 மில்லியன். அதாவது இந்திய விலைப்படி ரூ. 270 கோடியாகும்.
Rolls-Royce 15 HP : ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது கார் மாடல் இதுவாகும். மொத்தமாகவே 6 கார்கள் தான் தயாரிக்கப்பட்டது. இந்த காரின் வேகம் 15 குதிரைத்திறனாகும். இதன் தற்போதைய விலை 35 மில்லியன் டாலர்கள். இந்திய விலையில் ரூ. 248 கோடியாகும்.
பழைய காரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமான்னு நீங்க கேக்குறது எங்களுக்கு புரியுது. இருந்தாலும் பழமைக்கு இருக்கும் மதிப்பு விலைப்பட்டியலுக்கு அப்பாற்பட்டது தான்.