Five simple early winter hair care tips Tamil News : குளிர்காலம், குறிப்பாக நாட்டின் வடக்குப் பகுதியில், வறண்டதாக இருக்கும். ஈரப்பதத்தின் திடீர் மற்றும் செங்குத்தான வீழ்ச்சி சருமத்தின் அமைப்பை மாற்றும். இதனால், நம் உச்சந்தலையும் பாதிக்கப்பட்டு, முடி வறண்டு, செதில்களாக மாறும். அதனால்தான் முடிக்கு தினமும் எண்ணெய் வைப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
பலர் குளிர்காலத்தில் சரும பராமரிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், தலைமுடி பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. மலிவு விலையில் கிடைக்கும் ஆயுர்வேத பிராண்டான மெல்லோ ஹெர்பல்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுஜாதா ஷர்தா, குளிர்காலத்தில் கூந்தல் உடையக்கூடியதாகி, உச்சந்தலையில் அரிப்பு மற்றும் மந்தமான தன்மைக்கு வழிவகுக்கும் என்கிறார்.
வெப்பநிலை குறையத் தொடங்கியவுடன், தங்களின் தலைமுடியை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த ஐந்து எளிய உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
1. தண்ணீர் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்
உங்கள் தலைமுடியின் வேர் முதல் நுனி வரை ஆரோக்கியமாக இருக்க, தண்ணீரைக் குறைக்காதீர்கள் மற்றும் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பூசணி விதைகள் மற்றும் பல ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான கொழுப்புகள் உங்கள் தலைமுடிக்குத் தேவையான புரதத்தைக் கொடுக்கின்றன. மேலும், தலைமுடியையே உள்ளிருந்து வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது. அவை உங்கள் தலைமுடியை உடையும் வாய்ப்புகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் முடியைப் பளபளப்பாக்கும் மற்றும் புரதச்சத்து குறைபாட்டால் வரும் ஃப்ரிஸைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
2. எண்ணெய் தேய்க்கவும்
எண்ணெய் தடவுவது குளிர்காலக் காற்றை உங்கள் தலைமுடியிலிருந்து விலக்கி வைக்கும். உங்கள் தலைமுடியைக் கழுவும் ஒவ்வொரு முறையும், உங்களுக்கு விருப்பமான எண்ணெய்யைத் தடவ வேண்டும். ஆர்கானிக் எள் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
3. ஆழமான கண்டிஷனிங்
கூடுதல் வறட்சிக்கு சில கூடுதல் டிஎல்சி தேவை, அதற்கு ஹேர் மாஸ்க்கை விடச் சிறந்தது எதுவாக இருக்க முடியும்? டீப் கண்டிஷனிங் ஹேர் மாஸ்க்கில் நீங்கள் யோசிக்காமல் முதலீடு செய்யலாம் அல்லது வீட்டிலேயே ஒன்றை உருவாக்கலாம். சிறிதளவு தயிர், சிறிதளவு தேன் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் சில துளி வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை சேர்த்து, நன்கு கலந்து தலையில் தேய்த்து, 15-20 நிமிடங்கள் ஊற விடவும். தயிர் ஒரு இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது. அதே நேரத்தில் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும்.
4. உங்கள் தலைமுடிக்கு வெந்நீரைத் தவிர்க்கவும்
கூடுதல் சூடான நீரில் குளியல் உங்கள் சருமத்தின் அனைத்து ஈரப்பதத்தையும் உறிஞ்சி, உங்கள் தலைமுடியை மந்தமாகவும், உடையக்கூடியதாகவும் ஆக்குகிறது. உச்சந்தலையில் செதில்களாகத் தோன்றுவதைத் தவிர்க்க, வெதுவெதுப்பான தண்ணீரைக் குளிப்பதற்குத் தேர்ந்தெடுங்கள். முடிந்தால், கடைசியாக முடியை அலச அறை வெப்பநிலையில் சிறிது தண்ணீரை ஊற்றவும்.
5. கண்டிஷனர்கள் மற்றும் எண்ணெய்களின் பயன்பாடு
வறண்ட காற்று அதிக சேதத்தைக் குறிக்கிறது. சீரம்களாக வேலை செய்யும் பல லீவ்-இன் கண்டிஷனர்கள் அல்லது ஹேர் ஆயிலை நீங்கள் தேர்வு செய்யலாம். ரசாயனப் பொருட்களுக்குச் செல்ல விரும்பவில்லை என்றால், முடியின் முனைகளில் ஒன்று அல்லது இரண்டு துளி எண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம்.
"இது தவிர, உங்கள் தலைமுடிக்கு ஏற்ற தயாரிப்புகளைத் தேர்வுசெய்து கொள்ளுங்கள், நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு தயாரிப்பின் லேபிளையும் கவனமாகப் படியுங்கள். சுத்தமான மற்றும் இயற்கையான தயாரிப்புகளைத் தேர்வு செய்வது நல்லது" என்கிறார் சாரதா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil