அடர்த்தியான முடி வேண்டுமா? அப்போ இந்த 5 டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்க
தலை முடியை அடர்த்தியாக வளரச் செய்வதற்கு சிம்பிளான 5 டிப்ஸ்களை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இவற்றை ஃபாலோ செய்வதன் மூலம் நம் முடி உதிர்வு பிரச்சனை குறையத் தொடங்கும்.
தலை முடியை அடர்த்தியாக வளரச் செய்வதற்கு சிம்பிளான 5 டிப்ஸ்களை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இவற்றை ஃபாலோ செய்வதன் மூலம் நம் முடி உதிர்வு பிரச்சனை குறையத் தொடங்கும்.
முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தப் பிரச்சனையை எவ்வாறு தடுப்பது என்று மிகுந்த குழப்பத்துடன் பலரும் இருக்கின்றனர்.
Advertisment
வயது வித்தியாசமின்றி, பாலின பேதமின்றி இன்றைய சூழலில் நிறைய பேருக்கு முடி உதிர்வு இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு நிறைய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உதாரணத்திற்கு, வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், தூக்கமின்மை, மன அழுத்தம் போன்று நிறைய காரணிகள் உள்ளன.
அதன்படி, வாழ்க்கை முறை மாற்றத்தில் குறிப்பிட்ட 5 டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் தலை முடியை அடர்த்தியாக வளரச் செய்ய முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். முதலாவதாக சுடுதண்ணீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
அடுத்தபடியாக, புரதச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக, முட்டை, மீன், கீரை வகைகளை சாப்பிடலாம். அதிலும் கீரைகளில் புரதத்துடன் சேர்த்து நிறைய மினரல்களும் உள்ளன. இது முடி வளர்ச்சி மட்டுமின்றி நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
Advertisment
Advertisements
இது மட்டுமின்றி ஒரு நாளைக்கு சுமார் மூன்று லிட்டருக்கு மேல் தண்ணீர் அருந்த வேண்டும். மேலும், தலை முடியை பராமரிக்க அடிக்கடி இயற்கையான ஹேர் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். துளசி, வேப்பிலை, வல்லாரை, முட்டையின் வெள்ளைக் கரு, தயிர் மற்றும் பால் போன்ற பொருட்களை இதற்காக பயன்படுத்தலாம்.
இறுதியாக, நம் கைகளை பயன்படுத்தி தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும். காலை நேரத்தில் சுமார் 5 நிமிடங்கள் இவ்வாறு மசாஜ் செய்யும் போது கூடுதல் பலன் அளிக்கும். இந்த அனைத்து டிப்ஸ்களையும் தொடர்ச்சியாக பின்பற்றும் போது நம் முடியின் வளர்ச்சி அடர்த்தியாகும். முடி உதிர்வு பிரச்சனையும் குறையத் தொடங்கும்.
நன்றி - Sarans Hospitals Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.