கிளின்சிங் முதல் சன்ஸ்கீரின் வரை.. பளபள மற்றும் ஆரோக்கிய சருமத்துக்கு உதவும் ஐந்து டிப்ஸ் இதோ!

மாய்ஸ்சரைசிங் முதல் எக்ஸ்ஃபோலியேட்டிங் வரை, இந்த சரும பராமரிப்பு குறிப்புகள் எப்போதும் உங்களுக்கு கைக்கொடுக்கும்.

தோல் என்பது உடலின் மிகப்பெரிய உறுப்பு, இது பாதுகாப்புக்கான முதல் வரிசையாகும். தீங்கு விளைவிக்கும் கூறுகள், நுண்ணுயிரிகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. அதனால்தான் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மற்றும் அதன் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பது மிகவும் முக்கியமானது.

உங்கள் சருமத்தில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தடையை பாதிக்காமல் தொடர்ந்து செழித்து வளர்வதை உறுதிசெய்ய, கீஹ்ல்ஸ் இந்தியாவைச் சேர்ந்த மூத்த தோல் பராமரிப்பு நிபுணர் ரஜத் மாத்தூர் பகிர்ந்துள்ள சில எளிய தோல் பராமரிப்பு குறிப்புகளைப் பாருங்கள்.  

உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தை சுத்தப்படுத்துதலுடன் தொடங்குங்கள்

சுத்தப்படுத்துதல் என்பது உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தின் மிக முக்கியமான பகுதியாகும். உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தின் முதல் படி, மேக்கப், அழுக்கு அல்லது அதிகப்படியான எண்ணெயை அகற்ற உங்கள் முகத்தை கவனமாக சுத்தம் செய்வதாகும். pH-நடுநிலை, சோப்பு இல்லாத ஃபேஸ் ப்யூரிபயர் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும், இது உங்கள் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெயை அகற்றாமல் மாசுபாட்டை நீக்குகிறது.

வாராந்திர எக்ஸ்ஃபாலியேஷன் 9exfoliation) அவசியம்

சருமம் பல வெளிப்புற அழுத்தங்களைக எதிர்கொள்கிறது, அதனால்தான் வாரம் ஒரு முறை அதை எக்ஸ்ஃபாலியேட்டிங் செய்வது அவசியம். இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தவும், அழுக்கு மற்றும் இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது. எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திற்கு, லேசான ஸ்க்ரப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

சருமத்தை மாய்ஸ்சரைஸ் – ஹைட்ரேட் ஆக வைத்திருங்கள்!

இவை இரண்டும் வெவ்வேறு கருத்துக்கள்; ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தைப் பூட்ட உதவுகிறது மற்றும் செல்களை நீரேற்றத்துடன் வைத்திருகிறது. நீரேற்றம் (hydration) உங்கள் தோலில் உள்ள நீர் அளவை பராமரிக்கிறது. பெருமாலும் நாம் வீட்டிற்குள்ளும் ஏசியிலும் அதிக நேரம் செலவிடுகிறோம். இதனால் சருமம் வறண்டு, ஈரப்பதம் இல்லாமல் போகும். 8 மணிநேர இடைவெளியில் இரண்டு முறை மாய்ஸ்சரைசிங் செய்வது அவசியம். இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது, அதனால் வெடிப்பு மற்றும் வறண்ட தோற்றத்தை ஏற்படுத்தாது.” சருமத்தின் தன்மையை சிறப்பாக வைத்திருக்க, இலகுவான காமெடோஜெனிக் (comedogenic ) அல்லாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது  அவகடோ பழத்தில் ஈரப்பதமூட்டும் குணங்கள் உள்ளன.

ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள்

உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன – வைட்டமின் சி-யின் பயன்பாடு தீவிரமான சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் சருமத்திற்கு அண்டி-ஏஜிங் ஏஜண்ட்-ஆக செயல்படுகிறது.

பாதுகாப்புக்காக சன்ஸ்கிரீன்

நீங்கள் வெளியே வந்தாலும் சரி; இல்லாவிட்டாலும் சரி, சன்ஸ்கிரீன் அவசியம். சன்ஸ்கிரீன் மூலம் உங்கள் தோலைத் தடவுவம், இது ஒரு தடையாக செயல்பட்டு சருமத்தைப் பாதுகாக்கும். உங்கள் கழுத்தின் பின்புறம் மற்றும் உங்கள் கைகளில் இதைப் பயன்படுத்த மறக்காதீர்கள், ஏனெனில் அவை சூரியனுக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றன.

இந்த ஐந்து குறிப்புகளையும் பின்பற்றி உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வைத்திருங்கள்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Five tips to build your skin health and immunity

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com