2025-ஆம் ஆண்டு பிறப்பதற்கு சில நாட்களே உள்ளன. புத்தாண்டை வரவேற்கும் விதமாக பலரும் பார்ட்டிகளுக்கான பிளான்கள் போட்டு வைத்திருப்பார்கள். சிலருக்கு பார்ட்டிகள் கொண்டாடி போர் அடித்திருக்கும். இன்னும் சிலருக்கு வீட்டில் இருந்தபடியே உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பார்ட்டி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவர்களுக்காகவே 5 பார்ட்டி ஐடியாக்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
1. Glow-in-the-Dark Party
உங்கள் வீட்டை ஒளிரும் பொருள்களைக் கொண்டு அலங்கரிக்கவும். உதாரணமாக, க்ளோயிங் ஸ்டிக்ஸ், ஃப்ளூரோசென்ட் மற்றும் நியான் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கலாம். இந்த வெளிச்சத்தை தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அனைத்து விடுங்கள். இப்போது, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து பிடித்தமான பாடலுக்கு நடனமாடுங்கள். சூழலை மேலும் அழகாக்க உங்களுக்கு பிடித்தமான உணவு பொருள்களை பரிமாறுங்கள். நிச்சயம் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
2. Fun and Quirky Games
உங்கள் வீட்டை விளையாட்டு கூடம் போல ஈஸியாக மாற்ற முடியும். பிங் - பாங், யூனோ கார்ட் கேம்கள் போன்றவற்றை நண்பர்களுடன் சேர்ந்து விளையடலாம். விளையாட்டில் ஆர்வம் குறையாமல் இருக்க, சில சவால்களையும் கொடுக்கலாம். மேலும், விளையாட்டின் இடையே வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு மகிழலாம்.
3. Fortune-Telling Fun
கொண்டாட்டங்களை மேலும் சுவாரசியமாக்க ஒரு ஐடியா உண்டு. சிறிய காகிதங்களில் சில குறிப்புகளை எழுதலாம். உதாரணமாக, வரும் ஆண்டில் நீங்கள் மிக மோசமான தேநீர் பருக வேண்டிய சூழல் வரும், அடுத்த ஆண்டில் புதிய பொழுதுபோக்கு பழக்கத்தை கடைபிடிப்பீர்கள் என காகிதங்களில் எழுதி அவற்றை மடித்து வைக்க வேண்டும். இப்போது, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அந்த காகிதங்களை எடுக்கச் சொல்லி அவற்றை சத்தமாக வாசிக்க செய்ய வேண்டும். இது உங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சுவாரசியத்தை கூட்டும்.
4. Indoor Adventure
உங்கள் வீட்டை சுற்றி ட்ரஷர் ஹன்ட் விளையாடலாம். சிறிய பரிசு பொருள்களை வீட்டை சுற்றி மறைத்து விட்டு, அவற்றை எடுப்பதற்கான க்ளூக்களை நண்பர்களுக்கு கொடுக்கலாம். இவை நம் குழந்தை பருவ விளையாட்டை நினைவூட்டுவதால் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.
5. Self-Care Night
இது போன்ற கொண்டாட்டங்களில் ஆர்வம் இல்லாதவர்கள், தங்களுக்கான சரும பராமரிப்பு போன்ற செயல்களில் புத்தாண்டு இரவை செலவளிக்கலாம். இவை நம் மனதிற்கு நெருக்கமாக இருப்பதுடன், நம் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்பதை நினைவுபடுத்தக் கூடியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.