டாக்டர் பிரதீப் சூர்யவன்ஷி
குளிர்காலம் தொடங்கியவுடன், குழந்தையின் தோல் பராமரிப்பில் மாற்றம் தேவைப்படலாம். வறண்ட, குளிர்ந்த காற்று குறைந்த ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தை உலர்த்தும். பெரியவர்களை விட குழந்தைகளுக்கு மிகவும் மென்மையான மற்றும் சென்சிட்டிவான தோல் உள்ளது, இதனால் அவை ஈரப்பதத்தை இழக்க வாய்ப்புள்ளது. உண்மையில், புதிதாகப் பிறந்த குழந்தையின் தோல் வயதுவந்த தோலுடன் ஒப்பிடும்போது 30 சதவீதம் மெல்லியதாகவும், குறைவான நீரேற்றமாகவும், இயற்கையான ஈரப்பதமூட்டும் காரணியைக் குறைக்கவும் உள்ளது.
குளிர்காலத்தில் தோல் வறட்சி, ஒவ்வாமை மற்றும் எரிச்சல் பொதுவானது மற்றும் பொருத்தமான தயாரிப்புகளுடன், ஒரு குறிப்பிட்ட தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுவதன் மூலம், பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குளிர்கால மாதங்களில் குழந்தைகளின் சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க சில பயனுள்ள குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. மாய்ஸ்சரைஸ்
மசாஜ் செய்வது, குளிப்பாட்டுவது அல்லது பிற குழந்தை பராமரிப்பு முறை எதுவாக இருந்தாலும், பயன்படுத்தப்படும் பொருட்கள் ஈரப்பதமூட்டும் கூறுகளால் செறிவூட்டப்பட்டிருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். வைட்டமின் ஈ, வைட்டமின் பி5, பால் புரதம் மற்றும் அரிசி தண்ணீர் போன்ற ஆழமான ஊட்டச்சத்தை வழங்கும் பொருட்கள் குழந்தையின் தோலில் மென்மையாக இருக்கும்.
2. குளியல் நேரத்தை மாற்றவும்
குழந்தையின் தோல் பராமரிப்பு வழக்கத்தில் குளிப்பாட்டுவது ஒரு முக்கிய பகுதி. நீண்ட, சூடான குளியல் கொடுப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது குழந்தையின் தோலை உலர்த்தும். ஈரப்பதம் இழப்பைக் குறைக்க, வெதுவெதுப்பான நீரில் சீக்கிரம் குளிப்பாட்டுவது சிறந்தது. குறிப்பாக சூடான நீரில், தோல் ஈரப்பதத்தை இழந்து வறண்டு போகலாம்.
ஸ்பான்ஞ் பாத்திங் (Sponge bathing) கூட ஒரு சிறந்த தேர்வு. குழந்தையின் மென்மையான மற்றும் சென்சிட்டிவான தோலுக்காக வடிவமைக்கப்பட்ட pH சமநிலை, ஹைபோஅலர்கெனி மற்றும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட மைல்ட் கிளீன்சரை (mild cleanser) பயன்படுத்தலாம்.
3. குளிப்பாட்டிய பிறகு மாய்ஸ்சரைஸ் அவசியம்
குளிப்பாட்டிய பிறகு உங்கள் குழந்தையை மாய்ஸ்சரைசிங் ஆக வைத்திருப்பது மிகவும் முக்கியம். சருமம் சற்று ஈரமாக இருக்கும்போது மாய்ஸ்சரைசிங் லோஷனைப் பயன்படுத்துவது நல்லது. மென்மையான பேபி லோஷன் அரிசி எக்ஸ்ட்ராக்ட் மற்றும் பால் புரதங்களின் நன்மைகளால் செறிவூட்டப்பட்ட பொருட்கள், குழந்தைகளின் சருமத்துக்கு ஊட்டமளிக்கிறது. அத்தகைய பொருட்கள் கொண்ட லோஷன்கள் கிரீமியர் மற்றும் வைட்டமின் E B5 இன் அதிக உள்ளடக்கம் கொண்டவை, அவை நாள் முழுவதும் ஈரப்பதத்தை தக்க வைத்திருக்கின்றன.
குழந்தையின் உடலுக்கு ஒரு லோஷன் மற்றும் முகத்திற்கு ஒரு கிரீம் பயன்படுத்துவது சிறந்தது. குளிர்ந்த காலநிலையில் குழந்தையின் கன்னங்கள் எளிதில் வறண்டுவிடும். சர்குலர் மோஷனில் (circular motion) இந்த கிரீம்களை தடவவும். குழந்தையின் முகம் பொதுவாக காற்றுக்கு வெளிப்படும் என்பதால், வெளியில் செல்வதற்கு முன்னும், பின்னும் மாய்ஸ்சரைஸாக்குவது உதவும்.
மேலும், வீட்டில் காற்று வறண்டிருந்தால், ஹ்யூமிடிஃபயர் (humidifier) பயன்படுத்துவது நல்ல யோசனை.
4. டயப்பர் ரேஷஸ்-க்கு எதிராக பாதுகாப்பு
குளிர்காலத்தில் குழந்தை கூடுதல் அடுக்குகளில் துணியால் மூடப்பட்டிருக்கும் மற்றும் அடிக்கடி டயப்பர்களை மாற்றுவது கடினம். ரேஷஸ் மற்றும் வீக்கத்தைத் தவிர்க்க, டயபர் பகுதியை ஆல்கஹால் இல்லாத மற்றும் சோப்பு இல்லாத மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் கொண்ட வைப்ஸ் மூலம் சுத்தம் செய்யவும். ஈரமான டயப்பர்களை சீரான இடைவெளியில் மாற்ற வேண்டும், ஏனெனில் அவை தொற்று மற்றும் ரேஷஸ்க்கு வழிவகுக்கும்.
5. டிரை ஸ்கின் கண்டீஷன்
குழந்தைக்கு ஏற்கனவே வறண்ட சருமம் அல்லது அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் நிலைகள் இருந்தால், அவை குளிர்காலத்தில் இன்னும் மோசமாகலாம். எனவே, அதைப் பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் IAP வழிகாட்டுதல்களின்படி, இத்தகைய நிலைமைகள் தோல் தடையை பலவீனப்படுத்துகின்றன. அதனால், மாய்ஸ்சரைஸ் கிரீம்கள் போன்ற மென்மையாக்கல்களைப் பயன்படுத்துவது தடையின் ஒருமைப்பாட்டை மீட்டெடுக்கவும், தொற்றுநோய்களைத் தடுக்கவும் மற்றும் சருமத்திற்கு மேலும் சேதத்தைத் தவிர்க்கவும் முக்கியமானது.
(இந்த கட்டுரையின் எழுத்தாளர் பேராசிரியர் மற்றும் தலைவர், நியோனாட்டாலஜி துறை, பாரதி வித்யாபீத் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, புனே, மற்றும் இந்திய அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (IAP) உறுப்பினர்.)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“