கோவை அருகே 5 வயது சிறுமி, கால்களில் சாகச வளையத்தை சுற்றியபடி, 30 நொடிகளில் ரூபிக்ஸ் க்யூபை சரியாக பொருத்தி சாதனை படைத்துள்ளார்.
கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார், லட்சுமி பிரியா தம்பதியரின் மகள் யாழினி. ஐந்து வயதான இவர் எல்.கே.ஜி.படித்து வருகிறார்.

யாழினி தனது இரண்டு வயதிலேயே ஹூலா ஹூப் எனும் சாகச வளையம் சுற்றுவதில் தனி பயிற்சி பெற்றார். தொடர்ந்து தனது கைகள், இடுப்பு, கழுத்து ஆகிய உடல் பகுதிகளில் சாகச வளையத்தை சுற்றி உள்ளார்.
இவரது திறமையை கண்ட இவரது பெற்றோர், இவருக்கு அளித்த பயிற்சியின் காரணமாக சாகச வளையத்தை சுற்றுவதில் தற்போது சிறுமி தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்..
இந்நிலையில் தற்போது ஒரு நிமிடத்தில் குப்புற படுத்து கொண்டே சாகச வளையத்தை 130 முறை சுற்றிதோடு, இரண்டுக்கு இரண்டு எனும் ரூபிக்ஸ் க்யூபை முப்பது நொடிகளில் சரியாக பொருத்தியும் சாதனை படைத்துள்ளார்.


இவரது இந்த சாதனை ஜாக்கி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. ஐந்து வயதிலேயே சிறுமி செய்த சாதனைக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“