/indian-express-tamil/media/media_files/2025/09/14/download-12-2025-09-14-18-29-33.jpg)
முழங்கால் வலி மட்டும் வந்துவிட்டால் உங்ளால் இயல்பாக நடக்கக்கூட முடியாது. ஊசி குத்துவது போல் உள்ளுக்குள் குத்திக் கொண்டே இருக்கும். அந்தநேரத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் வலி மிகப்பெரிய ரணத்தைக் கொடுக்கும். சிறிய படிக்கட்டுக்கள் கூட ஏற முடியாது. அந்தநேரத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவது அவசியம். சிறிய தவறு கூட உங்களின் முழங்காலை வெகுவாக பாதிக்க வாய்ப்பு இருக்ககிறது என்பதை நினைவில் வைத்து அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
முழங்கால் வலி இருகும்போது செய்ய வேண்டியவை
முழங்கால் வலி உள்ளவர்கள், முதலில் முழங்காலுக்கு போதுமான ஓய்வளிக்க வேண்டும். தேவையெனில் ஊன்றுகோல் அல்லது பிரேஸ் பயன்படுத்தலாம். ஐஸ் சிகிச்சை வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. மெதுவான கட்டு போட்டல் ரத்த ஓட்டத்தை பாதிக்காமல் வீக்கத்தை தணிக்கும். வலியின் தன்மையை பொருத்து நீச்சல், சைக்கிள் ஓட்டம் போன்ற மெதுவான பயிற்சிகள் பயனளிக்கும். பிஸியோதெரபிஸ்ட் ஆலோசனையின் அடிப்படையில் பயிற்சிகளை மேற்கொள்வது, வலியை குறைத்து முழங்கால் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
முழங்கால் வலி இருக்கும்போது செய்யக்கூடாதவை
முழங்கால் வலியை அதிகரிக்கும் ஓடுதல், குதித்தல், வேக நடை மற்றும் படிக்கட்டுகள் ஏறுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். காலணிகள் மென்மையாகவும், ஆதரவுடனும் இருக்க வேண்டும். அதிக எடை வலியை அதிகரிக்கக்கூடியதால், உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் மூலம் அதை கட்டுப்படுத்த வேண்டும். வலியின் காரணம் என்னவென்று தாங்களே ஊகிக்காமல், மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெற வேண்டும். தேவைப்பட்டால், லேசர் அல்லது ரோபோடிக் அறுவை சிகிச்சைகளும் பரிசீலிக்கலாம்.
இதை சரி செய்வதற்கு நீங்கள் சில பயிற்சிகள் செய்யலாம். அப்படி மூன்று பயிற்சிகள் பற்றி இந்த பதில் பார்க்கலாம்.
- முதல் பயிற்சியாக நேராக ஒரு நாற்காலியில் அமர்ந்துகொள்ள வேண்டும். பிறகு ஒற்றை காய் தூக்கி இறக்க வேண்டும். இதை இரண்டு கால்களுக்கும் செய்ய வேண்டும்.
- இரண்டாவது பயிற்சிக்கு அப்படியே அமர்ந்துகொண்டு ஒற்றை காலை நன்கு நீட்டி மடக்க வேண்டும். அதையே மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும்.
- மூன்றாவதாக அடஹி நாற்காலியில் நின்று பிறகு அமர வேண்டும். இந்த பயிற்சியை செய்யும் போது கைகளை நெஞ்சின் மீது மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மூன்று பயிற்சிகளையும் 10 முறை 3 செட்களாக செய்ய வேண்டும். இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, யாரு வேண்டுமானாலும் செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us