இந்த விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து... தலை முடி கருகருன்னு வளர இதை பண்ணுங்க: டாக்டர் நித்யா

ஆளி விதை ஜெல்லை வீட்டிலேயே தயாரித்து, வாரத்திற்கு இருமுறை பயன்படுத்துவதன் மூலம் தலைமுடியை ஆரோக்கியமாக்கி, இளநரையைத் தடுத்து, கருகரு கூந்தலைப் பெறலாம்.

ஆளி விதை ஜெல்லை வீட்டிலேயே தயாரித்து, வாரத்திற்கு இருமுறை பயன்படுத்துவதன் மூலம் தலைமுடியை ஆரோக்கியமாக்கி, இளநரையைத் தடுத்து, கருகரு கூந்தலைப் பெறலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Flax seeds hair growth premature greying

Dr Nithya

உஷ்ணமே பல பிரச்சனைகளுக்கும் காரணம் என்பதை அறிவீர்களா? உடல் சூடு அதிகரிக்கும்போது, இளநரை போன்ற பிரச்சனைகள் தலைதூக்கும். ஆனால், இந்த உடல் சூட்டைக் குறைப்பதன் மூலம் இளநரைக்குத் தீர்வு காணலாம். இதற்கு ஒரு அற்புதமான வழி இருக்கிறது. அதுதான் ஆளி விதைகள்.

Advertisment

ஆளி விதைகள் (Flax Seeds) தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

ஆளி விதை ஜெல் தயாரிக்கும் முறை:

Advertisment
Advertisements

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு ஆளி விதைகளைப் போட்டு, மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றவும். இதை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்து, ஆளி விதைகள் ஒரு திக்கான ஜெல் பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும். ஜெல் பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து, ஆறியதும் ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி ஜெல்லை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கவும்.

எப்படிப் பயன்படுத்துவது?

தயாரித்து வைத்துள்ள ஆளி விதை ஜெல்லை வாரத்திற்கு இரண்டு முறை உங்கள் தலையில், குறிப்பாக முடி வேர்களில் படும்படி நன்கு தடவவும். சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் மைல்டான ஷாம்பு கொண்டு அலசலாம்.

ஆளி விதை ஜெல்லின் பலன்கள்

Flax seeds

இந்த ஆளி விதை ஜெல்லைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது, உங்கள் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற ஆரம்பிக்கும். இதன் விளைவாக, தலைமுடி மிகவும் ஆரோக்கியமாக வளரும். மேலும்:

தலைமுடி உதிர்வது குறையும்.

முடி வலுவாகவும், உறுதியாகவும் மாறும்.

முடி உடைவது நிற்கும்.

இளநரை குறையும், புதிய வெள்ளை முடிகள் தோன்றுவது தடுக்கப்படும். நீங்களும் இதை முயற்சி செய்து, ஆரோக்கியமான பளபளப்பான முடியைப் பெறுங்கள்!

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: