எதுக்கு காசு கொடுத்து கடையில வாங்குறீங்க? 100 சதவீதம் இயற்கையான ஃபேஸ் ஜெல் வீட்டிலேயே இப்படி ரெடி பண்ணுங்க

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், முதுமையின் அறிகுறிகளான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உருவாவதைத் தாமதப்படுத்துகின்றன. ஆளிவிதை ஜெல் முகத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, முகப்பருக்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், முதுமையின் அறிகுறிகளான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உருவாவதைத் தாமதப்படுத்துகின்றன. ஆளிவிதை ஜெல் முகத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, முகப்பருக்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

author-image
WebDesk
New Update
Flax seeds

Flaxseed gel homemade DIY flaxseed gel how to make

பளபளப்பான, மென்மையான சருமம் வேண்டுமென்றால், விலை உயர்ந்த க்ரீம்களைத் தேடி ஓட வேண்டாம். உங்கள் சமையலறையில் இருக்கும் ஒரு பொருளே போதும். ஆம், அதுதான் ஆளிவிதை! கூந்தலுக்கு மட்டுமல்ல, முகத்திற்கும் அற்புதமான பலன்களைக் கொடுக்கக்கூடிய ஒரு பொக்கிஷம் இந்த ஆளிவிதை. 

Advertisment

ஆளிவிதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தைப் பழுதுபார்த்து, அதன் இயற்கையான பளபளப்பைப் புதுப்பிக்க உதவுகின்றன. இது சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளித்து, வறண்டு போவதைத் தடுக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், முதுமையின் அறிகுறிகளான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உருவாவதைத் தாமதப்படுத்துகின்றன. ஆளிவிதை ஜெல் முகத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, முகப்பருக்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆளிவிதை ஜெல் எப்படி செய்வது?  

DIY Flax seed gel

2 கப் தண்ணீர் எடுத்து அதில் அரை கிண்ணம் ஆளிவிதை சேர்க்கவும். மிதமான தீயில், அதை கொதிக்க விடவும், மர கரண்டியால் தொடர்ந்து கிளறவும். அது வெள்ளை நுரையுடன் ஜெல் போன்று மாறும்போது போது தீயை அணைக்கவும். அதை 20-30 நிமிடங்கள் குளிர விடவும்.

Advertisment
Advertisements

மெல்லிய காட்டன் துணியைப் பயன்படுத்தி, ஆளிவிதை கலவையிலிருந்து ஜெல்லை பிரித்தெடுக்கவும். அதை சுத்தமான ஏர்டைட் கன்டெய்னரில் சேமிக்கவும். இந்த ஜெல்லை உங்கள் ஃபிரிட்ஜில் 1 மாதம் வரை சேமிக்கலாம், எப்போது வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம். இந்த ஜெல்லை உங்கள் முகம் முழுவதும் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் புத்துணர்ச்சி பெறும்.

ஆளிவிதை ஜெல் ஒரு எளிய, பாதுகாப்பான மற்றும் செலவு குறைந்த வழி. இதை முயற்சி செய்து பார்த்து, உங்கள் சருமத்தில் ஏற்படும் அதிசய மாற்றங்களை நீங்களே உணருங்கள்

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: