ஆளி விதை உங்கள் உடலுக்கு மட்டுமல்ல, உங்கள் சருமத்திற்கும் அற்புதமானவை. அவற்றில் லிக்னான்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை சருமத்தை இறுக்கமாக்கவும், தோல் தொங்குவதைத் தடுக்கவும் உதவுகின்றன.
ஆளி விதையில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை உங்கள் சருமத்துக்கு ஊட்டமளித்து, நீரேற்றமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கின்றன. ஆளிவிதை உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
நீங்கள் அவசியம் முயற்சி செய்து பார்க்க வேண்டிய ஆளிவிதை ஜெல் இங்கே உள்ளது.
ஆளிவிதை ஜெல் எப்படி செய்வது?
2 கப் தண்ணீர் எடுத்து அதில் ½ கிண்ணம் ஆளிவிதை சேர்க்கவும். மிதமான தீயில் அதை கொதிக்க விடவும். மரக் கரண்டியால் தொடர்ந்து கிளறவும்.
கலவை வெள்ளை நுரையுடன் ஜெல் போன்று மாறும்போது போது தீயை அணைக்கவும். அதை 20-30 நிமிடங்கள் குளிர விடவும்.
மெல்லிய காட்டன் துணியைப் பயன்படுத்தி, ஆளிவிதை கலவையிலிருந்து ஜெல்லை பிரித்தெடுக்கவும். அதை சுத்தமான காற்று புகாத கன்டெய்னரில் சேமிக்கவும்.
இந்த ஜெல்லை உங்கள் ஃபிரிட்ஜில் 1 மாதம் வரை சேமிக்கலாம், எப்போது வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம். இந்த ஜெல்லை உங்கள் முகம் முழுவதும் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் புத்துணர்ச்சி பெறும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“