இவங்கள வச்சுக்கிட்டு நாங்க பட்ற அவஸ்தை இருக்கே... ப்ளைட் பேசஞ்சர்ஸ் அலப்பறைகள்!

தங்களின் குழந்தைகளையும் சீட்டில் இருந்து இறக்கிவிட்டு இங்கும் அங்கும் அலைய விடுவது.

தங்களின் குழந்தைகளையும் சீட்டில் இருந்து இறக்கிவிட்டு இங்கும் அங்கும் அலைய விடுவது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Flight attendants reveal annoying things

Flight attendants reveal annoying things passengers do : விமானங்களில் பயணம் செய்யும் போது, நமக்கு சில விசயங்கள் நிச்சயமாக அசௌகரியமாகவே இருந்தாலும் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்தே ஆகவேண்டும். ஆனால் சில நேரங்களில் பயணிகள், விமானத்தில் வேலையில் இருப்பவர்களின் சொற்களை ஒரு போதும் கேட்பதே இல்லை. அப்படி பெரும் தொல்லையாக அமையும் சில முக்கியமான நிகழ்வுகள்

Flight attendants reveal annoying things passengers do

உணவு பரிமாறும் போது ஹெட்போன்களை மாட்டிக் கொண்டிருப்பது

Advertisment

உணவு அல்லது குடிப்பதற்கு ஏதாவது வேண்டுமென்று கேட்டுவிடுவார்கள். ஆனால் அந்த உணவை கொடுக்க அங்கு செல்லும் போது காதுகளில் ஹெட்போன்களை மாட்டியவாறு அமர்ந்திருப்பார்கள். அவர்களிடம் ஒரு 10 முறையாவது உங்களுக்கு உணவு வந்துள்ளது என்று கூற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

உணவு சாப்பிட முடித்தவுடன் அதன் குப்பைகளை மீண்டும் அளிக்கும் போது...

சாப்பிட்டு முடித்துவிட்டால் அந்த தட்டு, ப்ளாஸ்டிக் பொருட்களை இரண்டொரு நிமிடங்கள் கூட அவர்களால் பார்த்துக் கொண்டு இருக்க முடிவதில்லை. விரைவாக அதை வந்து சுத்தம் செய்யக் கோரி அழுத்தம் கொடுப்பது.

சீட் பெல்ட்

இதுவும் மிக முக்கியமான ஒன்றாகும். தாங்களும் பல நேரங்களில் பின் தொடருவதில்லை. தங்களின் குழந்தைகளையும் சீட்டில் இருந்து இறக்கிவிட்டு இங்கும் அங்கும் அலைய விடுவது.

ஒரு சீட்டில் இருந்து மற்றொரு சீட்டுக்கு மாறச் சொல்லி கேட்டல்

Advertisment
Advertisements

விமானத்தில் வந்து அமர்ந்தவுடன் ஒரு அசௌகரியம் தோன்றினால் உடனே எனக்கு வேறொரு சீட் அரேஞ்ச் செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்பது. விமானங்களில் சீட் அரேஞ்ச்மெண்ட் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இருக்கிறது. அதை அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை.

தேவையே இல்லாமல் கால் பட்டனை அழுத்துவது

ஒருவருக்கு ஏதாவது முக்கியமான தேவை இருக்கும் போதே விமானப் பணிபெண்களின் உதவியை நாட வேண்டும். அப்படி எந்த வித தேவையுமே இல்லாமல் தொடர்ந்து தேவை இல்லாமல் கால் பட்டனை அழுத்திக் கொண்டிருப்பது.

விமான பணிப்பெண்களின் வேலை என்ன என்பதை உணராமல் இருத்தல்

இவை அனைத்தையும் விட மிக முக்கியமானது விமான பணிப் பெண்களின் தேவை மற்றும் கடமைகள் என்னென்ன என்பதை சற்றும் உணராமல் அவர்களை ஹோட்டலில் வேலை பார்க்கும் வெய்ட்ரஸ்களை போல நடத்துவது. எங்களின் பணியானது பயணிகளை பாதுகாப்பதும், இக்கட்டான சூழல்களில் அவர்களுக்கு உதவுவதும் தான்.

இதை விட மோசமானது, பயணிகள் தங்களின் தேவையை விமான பணி பெண்களை கால் பட்டன் மூலம் அழைத்து கேட்பதில்லை. மாறாக தேவையில்லாமல் அவர்களின் முதுகு மற்றும் தோள்பட்டையில் தொட்டு அழைத்தல்.

மேலும் படிக்க :ஏர் இந்தியா விமானத்தில் ஊழியரிடம் தகராறு செய்து வைரலான பெண் வக்கீல்: மர்மமான முறையில் சடலம் கண்டெடுப்பு!

Qatar Flight

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: