டிவி, செல்போன்களில் இவ்வளவு தள்ளுபடியா? - அமேசான், பிளிப்கார்ட்டில் திருவிழா ஸ்பெஷல்

Amazon,flipkart Discount Deals: இரு நிறுவனங்களும் அதன் நுகர்வோருக்கு வழங்கும் தள்ளுபடிகளை என்று நாங்கள் எதிர்பார்க்கும் பட்டியல் இங்கே-

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் மற்றும் அமேசானின்  கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை தற்போது மிகவும் பிரபலாமாகி வருகின்றது. இந்த விற்பனை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது . இரு வர்த்தக தளங்களும் மாறி மாறி நுகர்வோருக்கு பல்வேறு ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டிவிகள், ஹெட்ஃபோன்கள் போன்ற பலவற்றில் தள்ளுபடி மற்றும் சலுகைகளோடு வழங்கும் என்பது குறிப்பிடத் தக்கது .

இரண்டு பிராண்டுகளும் வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி தங்கள் பிளிப்கார்ட் பிளஸ் மற்றும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டும்  முன் விற்பனையை நடத்துகின்றன. இதனால், தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஒரு நாள் முன்னதாகவே அந்தந்த விற்பனையைத் தொடங்கும்.

இரு நிறுவனங்களும் அதன் நுகர்வோருக்கு வழங்கும் தள்ளுபடிகளை என்று நாங்கள் எதிர்பார்க்கும் பட்டியல் இங்கே:

ஸ்பெஷல் திருவிழாவில் ஸ்மார்ட்போன்களுக்கான  தள்ளுபடி:  

ரெட்மி கே 20 தொடர்: 

சியோமி சமீபத்தில் தனது முதன்மை ரெட்மி கே 20 தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த தொடரின் கீழ் இரு சாதனங்களையும் விற்பனையின் போது தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ரெட்மி கே 20 6 ஜிபி / 64 ஜிபி ஸ்டோரேஜ்  ரூ .19,999 ஆகவும், ரெட்மி கே 20 ப்ரோ 6 ஜிபி / 128 ஜிபி மாடலுக்கு ரூ .24,999 ஆகவும் இந்த ஸ்பெஷல் விற்பனையில் கிடைக்க வாய்ப்புள்ளது  .

போக்கோ எஃப் 1

போகோ  நிறுவனத்தின் கடந்த ஆண்டில் வெளியிடப்படட்ட  போக்கோ எஃப் 1, செயல்திறன் அடிப்படையில்  சந்தையில்  ஏராளமான ஸ்மார்ட்போன்களை வெல்ல வாய்ப்பிருக்கிறது.  64 ஜிபி, 128 ஜிபி, மற்றும் 256 ஜிபி ஸ்டோராஜ் வகைகளான ஸ்மார்ட்போன் முறையே  ரூ .14,999, ரூ .15,999 மற்றும் ரூ .18,999 க்கு இந்த ஸ்பெஷல் விற்பனையில் கிடைக்க வாய்ப்புள்ளது.

ரெட்மி நோட் 7 தொடர்: 

ரெட்மி நோட் 7 எஸ் மற்றும் ரெட்மி நோட் 7 புரோ என்ற சமீபத்திய ரெட்மி நோட் சீரிஸ் இந்தியாவில் கிடைத்து வருகின்றன . இந்தியாவில் இன்னும், ரெட்மி நோட் 8 சீரிஸ் அறிமுகப் படுத்தாத நிலையில், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் ரூ .4,000 வரை தற்போது தள்ளுபடி தரப்பட்டு வருகிறது .

 

Redmi Note 7 series

 

 

ரெட்மி நோட் 7 ப்ரோ 4 ஜிபி / 64 ஜிபி, 6 ஜிபி / 64 ஜிபி, மற்றும் 6 ஜிபி / 128 ஜிபி போன்ற ஸ்டாராஜ் மாடல்களுக்கு முறையே  ரூ .11,999, ரூ .13,999 மற்றும் ரூ .14,999  என்ற விலையில் விற்கப்படலாம் .  ரெட்மி நோட் 7 எஸ் 3 ஜிபி / 32 ஜிபி மற்றும் 6 ஜிபி / 64 ஜிபி மாடல்கள் முறையே ரூ .8,999 மற்றும் ரூ .9,999 க்கும் விற்கப்படலாம் .

பிற ரெட்மி தொலைபேசிகள்

வரும் ஸ்பெஷல் விற்பனையின் போது, ​​ரெட்மி 7, ரெட்மி 7 ஏ, ரெட்மி கோ மற்றும் ரெட்மி ஒய் 3 ஸ்மார்ட்போன்களில் நுகர்வோருக்கு தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. ரெட்மி 7 2 ஜிபி / 32 ஜிபி வேரியண்டிற்கு ரூ .6,999 ஆகவும், 3 ஜிபி / 32 ஜிபி வேரியண்டிற்கு ரூ .8,499 ஆகவும் கிடைக்கும் என்று எதிர்பாரக்கப்படுகிறது .

ரெட்மி 7ஏ யின் 2 ஜிபி/16ஜிபி மாடல் ரூ .4,999 என்ற தள்ளுபடி விலையிலும், 2 ஜிபி / 32 ஜிபி மாடல் ரூ .5,799 விலையிலும் கிடைக்க வாய்ப்புள்ளது. ரெட்மி கோ நுகர்வோருக்கு ரூ .4,299 ஆகவும், ரெட்மிஒய் 3-ன்  3ஜிபி/32 ஜிபி வேரியண்ட், 4 ஜிபி / 64 ஜிபி வேரியண்ட் முறையே ரூ .7,999 மற்றும் ரூ .11,999 க்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆசஸ் 6 இசட்

Asus 6Z

 

ஆசஸ் 6 இசட் ஜிபி / 64 ஜிபி, 6 ஜிபி / 128 ஜிபி மற்றும் 8 ஜிபி / 256 ஜிபி என்ற மூன்று ரேம் / இன்டர்னல் ஸ்டோரேஜ் வகைகளில் தற்போது சந்தைகளில் கிடைகின்றது. தற்போது, இவைகளில் ஏற்கனவே ரூ. 4000  தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, 6 ஜிபி / 64 ஜிபி வேரியண்ட் ரூ .27,999 ஆகவும், 6 ஜிபி / 128 ஜிபி வேரியண்ட் ரூ .30,999 ஆகவும், 8 ஜிபி / 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ .35,999 ஆகவும் இந்த சஸ்பெஷல் திருவிழாவில் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆசஸ் 5 இசட்

ஆசஸ் 6 இசட்டிற்கு முன்னோடியான ஆசஸ் 5 இசட்டின் 6 ஜிபி / 64 ஜிபி மாடல் ரூ .16,999, 6 ஜிபி / 128 ஜிபி வேரியண்ட் ரூ .18,999 மற்றும் 8 ஜிபி / 256 ஜிபி வேரியண்ட்  ரூ .21,999 என்ற விலையிலும்  கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆசஸ் மேக்ஸ் (எம் 1), மேக்ஸ் புரோ (எம் 1), மேக்ஸ் (எம் 2)

ஆசஸ் மேக்ஸ் (எம் 1)  வெறும் ரூ .500 மட்டும் தள்ளுபடி பெரும், 3 ஜிபி ரேம் / 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ .6,499 க்கு விற்கப்படும் . மறுபுறம் ஆசஸ் மேக்ஸ் (எம் 2) 3 ஜிபி / 32 ஜிபி மற்றும் 4 ஜிபி / 64 ஜிபி மாடல்களில் ரூ .1000 தள்ளுபடி பெற்று , இது முறையே ரூ .6,999 மற்றும் ரூ .8,499  விலைகளில் விற்கப்படும்.

ஆசஸ் மேக்ஸ் புரோ (எம் 1) னின் மூன்று வகைகளுக்குமே ரூ .500 தள்ளுபடி செய்யப்படும். 3 ஜிபி / 32 ஜிபி, 4 ஜிபி / 64 ஜிபி மற்றும் 6 ஜிபி / 64 ஜிபி மாடல்கள் முறையே  ரூ .7,499, ரூ .8,499 மற்றும் ரூ .11,499 க்கு விற்கபடுகிறது.

மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் , ஒன் விஷன்: 

Motorola One Action, One Vision

 

மோட்டோரோலா தனது வாடிக்கையாளர்களுக்கு தனது மோட்டோரோலா ஒன் ஆக்சன் ஸ்மார்ட்போனில் ரூ .2,000 வரை தள்ளுபடியை அளித்து ரூ .11,999 க்கு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது. அதேசமயம், மோட்டோரோலா ஒன் விஷன் ரூ .14,999 க்கு கிடைக்கும் .

லெனோவா இசட் 6 ப்ரோ, லெனோவா கே 10 குறிப்பு, லெனோவா கே 9, லெனோவா ஏ 6

லெனோவா இசட் 6 ப்ரோ லெனோவா  நிறுவனத்தின் முதன்மையான ஸ்மார்ட்போன் ஆகும். வரும்,  விற்பனையின் போது வாடிக்கையாளர்களுக்கு ரூ .2,000 தள்ளுபடி கொடுத்து ரூ .31,999 க்கு விற்கப்படவுள்ளது.

லெனோவா சமீபத்தில் கே 10 நோட் மற்றும் ஏ 6 இரண்டையும் ஒன்றாக அறிமுகப்படுத்தியதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். கே 10 நோட் ரூ .11,999 க்கும், லெனோவா ஏ 6 நோட் ரூ .6,999 க்கும் விற்கப்படும். லெனோவா கே 10 நோட்டுக்கு முன்னோடியாக இருந்த லெனோவா கே 9 ரூ .6,499 க்கு இந்த ஸ்பெஷல் திருவிழாவில் விற்கப்படும்.

மோட்டோ ஜி 7

மோட்டோரோலா ஜி 7 நிறுவனத்தின் ஜி-சீரிஸின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆகும். அதிகபட்சமாக ரூ .7,500 தள்ளுபடி அளித்து , ரூ .16,999 க்கு கிடைக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

ஸ்பெஷல் திருவிழாவில் தொலைக்காட்சிகளின் தள்ளுபடி:  

தாம்சன் 32 அங்குல எல்ஈடி டிவி

 

வழக்கமாக பிளிப்கார்ட்டில் ரூ .8,999 க்கு விற்கப்படும் தாம்சன் 32 டிஎம் 3290, இந்த ஸ்பெஷல்  விற்பனையின் போது ரூ .6,999 க்கு கிடைக்க விருக்கிறது.

ப்ளூபங்க் டி.வி.

 

விற்பனையின் போது நுகர்வோருக்கு நான்-ஸ்மார்ட் டிவி மாடல் ஒன்றை ரூ .5,999 க்கு வழங்கப்போவதாகவும் ப்ளூபங்க் அறிவித்துள்ளது. இருப்பினும் அது எந்த வகையான மாடல் டிவி  என்பதை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

ஸ்பெஷல் திருவிழாவில் ஆடியோ சாதனங்களின்  தள்ளுபடி:  

ஒன்மோர்:

 

ஆடியோ கருவி உற்பத்தி செய்யும்  ஒன்மோர்  அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்  விற்பனையில் பங்கேற்கிறது. இந்த, ஸ்பெஷல் திருவிழாவின் போது அதன் தயாரிப்புகளுக்கு 44 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்திருந்தது.

விற்பனையின் போது, 1 மோர் பிஸ்டன் ஃபிட் ரூ .649 ஆகவும், டிரிபிள் டிரைவர் இயர்போன்கள் (ஓயர்ட்) ரூ .5,649 ஆகவும், டிரிபிள் டிரைவர் புளூடூத் இயர்போன்கள் ரூ .8,949 ஆகவும், குவாட் டிரைவர் இயர்போன்கள் ரூ .9,399 க்கும் கிடைக்கும்.

மேலும், டூயல் டிரைவர் ஏ.என்.சி ப்ளூடூத் இயர்போன்கள் 8,399 க்கும், ட்ரூ வயர்லெஸ் இயர்பட் ரூ .5,149 க்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close