பேக்கிங் ப்ளாஸ்டிக் பைகளை திரும்பப்பெறும் ஃப்ளிப்கார்ட் நடவடிக்கை

வரும் 2021-ம் ஆண்டுக்குள் முற்றிலும் மறுசுழற்சிக்கு உள்ளாகும் ப்ளாஸ்டிக் மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

By: Updated: November 19, 2019, 05:02:40 PM

ப்ளாஸ்டிக் பைகளை மறுசுழற்சிக்கு உள்ளாக்க வேண்டும் என்ற முடிவில், வால்மார்ட் நிறுவனமான ஃப்ளிப்கார்ட், டெலிவரி செய்யப்பட்ட பேக்கேஜிங் ப்ளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெற்று வருகிறது.

அத்தோடு அவற்றை மறுசுழற்சியின் பின் மீண்டும் பயன்படுத்துவதே தனது குறிக்கோள் என்றும் அது கூறியுள்ளது.

மேலும், மறுசுழற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டதோடு ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்குத் தகவல் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 2021-ம் ஆண்டுக்குள் முற்றிலும் மறுசுழற்சிக்கு உள்ளாகும் ப்ளாஸ்டிக் மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக மும்பை, டேராடூன், டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, பூனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Flipkart starts to collect plastic bags from customers in order to eliminate single use plastics by

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X