/tamil-ie/media/media_files/uploads/2020/09/image-2020-09-01T192355.158.jpg)
flipkart online shopping
Flipkart tamil news, flipkart online shopping: பிளிப்கார்ட்டில் 'பிளிப் ஸ்டார்ட் டே' விற்பனை இன்று (செப்டம்பர் 1) முதல் செப்டம்பர் 3 வரை நடைபெறுகிறது. இந்த விற்பனை நாட்களில், ​பல பிராண்டுகளைச் சேர்ந்த மின்னணு சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டு மற்றும் ஃபெடரல் வங்கி கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இன்ஸ்டன்ட் 10 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது .
குறைந்தபட்ச ரூ .1,500க்கு பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு கார்டுக்கு அதிகபட்சமாக 10% தள்ளுபடி (ரூ .1,000 வரை) வழங்கப்படுகிறது. மொபைல் போன் மற்றும் மளிகைப் பொருட்கள் தவிர பிற அனைத்து வகை பொருட்களுக்கும் இந்த சலுகை கிடைக்கிறது.
Flipkart online shopping ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்
மேற்படிப்பு, பணி அல்லது கேமிங் போன்ற காரணங்களுக்காக மடிக்கணினி வாங்க விரும்பினால், தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறிப்பிட்ட மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட லேப்டாப்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு நாட்களில் ஹெட்ஃபோன் மற்றும் ஸ்பீக்கர்களின் தேவையை நாம் நன்கு உணர்ந்திருப்போம். Boat, JBL போன்ற பிராண்டுகளின் புளூடூத் ஸ்பீக்கர்கள் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது.
சினிமா தியேட்டர்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், நெட்ஃபிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ போன்ற பிற OTT தளங்களில் திரைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. வீட்டிலேயே, சினிமா அனுபவம் கிடைக்கும் விதமாக, பிளிப்கார்ட்டில் ஹோம் தியேட்டர்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கிறது.
மேலும், இந்த ஆண்டு 'பிளிப் ஸ்டார்ட் டே' விற்பனையில் உங்கள் பொருளாதாரத்திற்கு ஏற்ப பல பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.