/indian-express-tamil/media/media_files/2025/01/19/Y3uerKiqPrEvake08pjI.jpg)
மலர் வைத்தியம்
மலர் மருத்துவம் என்பது பாட்டி வைத்தியம் போன்ற மருத்துவ முறையாகும். இந்த மருத்துவமுறை ஒருவகையான உளவியல் சார்ந்த பயணிக்கும் மருத்துவமுறை என்றும் இவை மனதின் போக்குக்கு தீர்வு தருவதால் உடல் தன் செயல்பாட்டை சீராக்கி மனதிற்கு புதிய தெம்பு தருவதாகவும் மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
இந்த மலர் மருத்துவ முறையை இங்கிலாந்தை சேர்ந்த டாக்டர். எட்வர்ட் பேட்ச் கண்டுபிடித்தார். இவர் மருத்துவதில் எம்.பி.பி.எஸ் மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை கற்று லண்டனில் உள்ள மலர்களில் மருத்துவ குணங்கள் உடைய மலர்களை கண்டறிய ஆராய்ச்சியில் ஈடுப்பட்டார்.
இவர் கண்டுப்பிடிக்கப்பட்ட 38 மலர்களின் மருத்துவ குணத்தை வரிசை படுத்தி உடல் நோய்களுக்கு ஏற்ற தீர்வை மனநிலையை மாற்றும் மூலம் அளிக்கும் முறை என்று நிரூபித்து காட்டினார். இவர் இறந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றைக்கும் அவரது மலர் மருத்துவ முறை மனநிலைக்கு சிறந்த மருந்தாகும்.
கேன்சரை குணப்படுத்துமா மலர் மருத்துவம்? | flower medicine home remedies for cancer?
இந்த வகை மருந்துகள் லண்டன் காட்டில் பூக்கக்கூடிய மலர்களைக் கொண்டு செய்யக்கூடியவை. இவை டாக்டர் எட்வர்ட் பேட்ச் யுனிவர்சிட்டியில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மருந்துகள் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால் எந்த விதமான விளைவுகளும் இல்லாதவை.
நோயாளிகளிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் கூறும் பதில்களை வைத்து அவர்களின் கடந்த கால மன அழுத்தத்தை கண்டறிந்து அவற்றை கணக்கில் கொண்டு அவர்களின் மன நிலையை ஆராய்ந்து மருந்துகள் தரப்படுவதாக கூறப்படுகிறது.
பயம், சந்தேகம், விருப்பமின்மை, தனிமை, கவலை, உறவுகளில் தடுமாற்றம் என அனைத்து வகையான பிரச்சனைகளையும் மலர் மருத்துவத்தில் குணமாக்க முடியும் என்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.