விசேஷ நாட்களில் பூக்களின் விலை வானத்தை தொட்டு விடுகின்றன. விலை அதிகமாக இருந்தாலும், விசேஷ நாட்களில், பண்டிகை நாட்களில் பூ வாங்கி வைக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு இருகும். விலை அதிகம் என்ற வருத்தமும் இருக்கும். இனி வருத்தப்படாதீர்கள். விசேஷ நாட்கள், பண்டிகை நாட்களுக்கு 1 வாரத்துக்கு முன்னதாக பூக்களின் விலை குறைவாக இருக்கும்போது, பூக்களை வாங்கி நாங்கள் சொல்கிற இந்த முறையில் வைத்தால் 10 நாள் 15 நாள் ஆனாலும் பூ வாடாமல் ஃபிரஷ்ஷாக இருக்கும். அதற்கு ஒரு காட்டன் துணி கொஞ்சம் அரிசி போதும், 15 நாள் ஆனாலும் பூக்கள் வாடாது. இதை ஃபாலோ பண்ணுங்க.
ஒரு காட்டன் துணி அல்லது நீங்கள் கடைகளில் ஏதேனும் பொருள் வாங்கினால் தருகிற டிஸ்யூ பேப்பர் பை அதை வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பூக்களை ஸ்டோர் செய்து வைப்பதற்கு ஒரு தாரளமான டப்பாவை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தண்ணீர் துளிகள் எதுவும் இருக்கக் கூடாது. முதலில் காட்டன் துணியை அல்லது டிஸ்யூ துணியை அந்த டப்பாவுக்கு உள்ளே அடிப்பகுதியில் போடுங்கள். அதன் மேல் சிறிது அரிசியைத் தூவுங்கள்.
அதற்கு மேல் நீங்கள் ஸ்டோர் செய்து வைக்கிற பூக்கள் அது கட்டிய பூக்களாக இருக்கலாம் அல்லது கட்டாத உதிரி பூக்களாக இருக்கலாம். அதை அதில் வையுங்கள். இப்போது, அதன் மேல் சிறிது அரிசியைத் தூவுங்கள். இப்போது, அந்த காட்டன் துணியைக் கொண்டு பூவை நன்றாக மூடுங்கள். இப்போது அந்த டப்பாவை அதன் மூடியால் மூடி வைத்துவிடுங்கள். அவ்வளவுதான், 15 நாட்கள் ஆனாலும், அந்த பூக்கள் வாடாமல் ஃபிரஷ்ஷாக வாசனையாக இருக்கும். எடுத்து பயன்படுத்தலாம். இதை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.