பிரபல நட்டுபுறப் பாடகி அனிதா குப்புசாமி மாடித் தோட்டத்தில் வளர்க்கும் செடி முருங்கையில் காய்கள் காய்த்திருப்பதை யூடியூப் சேனலில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். மொட்டை மாடித் தோட்டத்தில் வளர்க்கப்படும் முருங்கையில் இவ்வளவு காய்களா என்று பலரும் வியந்து வருகின்றனர்.
Advertisment
நகரம், கிராமம் என்று வேறுபாடு இல்லாமல் மாடித்தோட்டம் அமைப்பது என்பது பரவலாகி வருகிறது. மாடித்தோட்டம் அமைத்து அதில் விளையும் காய்கறிகளை வீட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளும்போது ஒரு திருப்தி கிடைக்கிறது.
பிரபல நாட்டுபுறப் பாடகி அனிதா புஷ்பவனம் குப்புசாமி தங்கள் வீட்டு மொட்டை மாடியில் அமைத்துள்ள மாடித் தோட்டத்தையும் அதில் வளர்க்கப்படும் செடிகளையும் தனது யூடியூப் சேனல் மூலம் அறிமுகம் செய்து வருகிறார். அதுமட்டுமல்ல, மாடித் தோட்டத்தில் என்னென்ன செடிகளை எப்படி விதைக்க வேண்டும் என்று டிப்ஸ்களையும் அளித்து வருகிறார்.
அந்த வரிசையில், அனிதா புஷ்பவனம் குப்புசாமி தனது வீட்டு மாடித் தோட்டத்தில், வளர்த்துள்ள செடி முருங்கையில், காய்கள் காய்த்திருப்பதைக் காட்டுகிறார். முருங்கை செடியில் இலைகளே இல்லாவிட்டாலும் நிறைய காய்கள் காய்த்திருக்கிறது. இந்த முருங்கை காய்கள் மிகவும் சுவையாக இருக்கும் என்று கூறுகிறார். மேலும், மாடித் தோட்டத்தில் வளர்க்கிற பூனை மீசை செடி சிறுநீரகக் கல் பிரச்னைக்கு நல்லது என்றும் ஒருவருக்கு பரிந்துரை செய்து அதை சாப்பிட்ட பிறகு சரியாகிவிட்டது என்றும் கூறுகிறார்.
நீங்களும் உங்கள் வீட்டு மாடித்தோட்டத்தில் இப்படி முருங்கையை வளர்த்துப் பாருங்கள். உங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்தும்போது கிடைக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது தெரிந்துகொள்ளுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”