/indian-express-tamil/media/media_files/2025/10/19/anitha-kuppusamy-2-2025-10-19-20-16-39.jpg)
இந்த கங்கா ஸ்நானம் எப்படி செய்ய வேண்டும் என்றால், நல்லெண்ணெய் தேய்த்து தான் குளிக்க வேண்டும் என்று அனிதா குப்புசாமி கூறுகிறார்.
தீபாவளி பண்டிகை நாளில் கங்கா ஸ்நானம் செய்வதற்கான நேர, கங்கா ஸ்நானம் செய்யும் முறை பற்றிய தகவல்களை பிரபல மக்களிசைப் பாடகி அனிதா புஷ்பவனம் குப்புசாமி கூறியுள்ளார்.
தீபாவளி பண்டிகை என்றாலே பலருக்கும் காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, பலகாரங்கள் சாமிக்கு படைத்து, ஒரு பெரிய விருந்து சமைத்து சாப்பிடுவதுதான் நினைவுக்கு வரும். ஆனால், இவற்றை முறையாக செய்ய வேண்டும் என பிரபல மக்களிசைப் பாடகி அனிதா குப்புசாமி கூறியுள்ளார்.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி நாளில் கங்கா ஸ்நானம் செய்வதற்கான நேர, கங்கா ஸ்நானம் செய்யும் முறையைக் அனிதா குப்புசாமி கூறியுள்ளார். அது என்ன கங்கா ஸ்நானம் என்று கேட்கிறீர்களா, அது ஒன்றுமில்லை, காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறையைத் தான் கங்கா ஸ்நானம் என்கிறோம்.
மற்ற நாட்களில் வழக்கமாக எண்ணெய் தேய்த்து குளிப்பது போல, பொழுது விடிந்த பிறகு, காலை 8 மணிக்கு 9 மணிக்கு தீபாவளி பண்டிகை நாளில் குளிக்கக்கூடாது என்றும் அனிதா குப்புசாமி கூறுகிறார்.
அனிதா குப்புசாமியின் வீடியோவைப் பாருங்கள்:
தீபாவளி பண்டிகை நாளில் அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள்ளாக இந்த கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். இந்த கங்கா ஸ்நானம் எப்படி செய்ய வேண்டும் என்றால், நல்லெண்ணெய் தேய்த்து தான் குளிக்க வேண்டும் என்று அனிதா குப்புசாமி கூறுகிறார்.
மேலும், கங்கா ஸ்நானம் செய்வதற்கான நேரம், கங்கா ஸ்நானம் செய்யும் முறை எப்படி தயார் செய்ய வேண்டும் என்றால், 2 பல்லு பூண்டு, 4 மிளகு போட்டு காய்ச்சி ஆற வைத்து பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்.
அதிகாலையில், வீட்டின் தலைவி, கிழக்கு பார்த்த திசையில், ஒரு சிறிய கோலமிட்டு, அதன் மீது ஒரு மனையை வைத்து, அதில் முதலில் வீட்டு குடும்பத் தலைவனை அமரவைத்து மஞ்சள் பொட்டு வைத்து, பிறகு, தலை, கை, கால் என உடல் முழுவதும் எண்ணெய் தேய்க்க வேண்டும். பின்னர், சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும். இப்படி வீட்டில் உள்ள அனைவரும் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்.
அனைவரும் கங்கா ஸ்நானம் செய்து முடித்து புத்தாடை அணிந்து, பலகாரங்களை சாமிக்கு படைத்து, பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். பிறகு, கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று பிரபல மக்களிசைப் பாடகி அனிதா குப்புசாமி கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.