குக்கர் அடிக்கடி ரிப்பேர் ஆகாமல் இருக்க… இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

அடுப்பில் வைத்து பயன்படுத்துவதால், பல குக்கர்களின் அடிபாகம் கருத்தும், கறி பிடித்து அசிங்கமாகவும் காணப்படும். அடிக்கடி தேய்த்தாலும் சில கரைகள் நீங்காது. இதற்கு ஒரு எளிய தீர்வு டூத்பேஸ்ட்தான்!

அடுப்பில் வைத்து பயன்படுத்துவதால், பல குக்கர்களின் அடிபாகம் கருத்தும், கறி பிடித்து அசிங்கமாகவும் காணப்படும். அடிக்கடி தேய்த்தாலும் சில கரைகள் நீங்காது. இதற்கு ஒரு எளிய தீர்வு டூத்பேஸ்ட்தான்!

author-image
WebDesk
New Update
 cooker repairs

குக்கர் அடிக்கடி ரிப்பேர் ஆகாமல் இருக்க… இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

குக்கரில் வரும் மிகப்பெரிய பிரச்னை, அதன் கேஸ்கெட் பலவீனமாவதுதான். இதனால் விசில் வராமல் போகும், ஆவி வெளியேறி, அரிசி பருப்பு சரியாக வேகாது. இதைத் தவிர்க்க 3 முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்

Advertisment

குக்கர் விசிலை குக்கர் மூடியிலேயே மாட்டி வைப்பதைத் தவிருங்கள். இது கேஸ்கெட்டை சீக்கிரமாகப் பழுதாக்கி, புதிய கேஸ்கெட் வாங்கும் நிலைக்கு தள்ளிவிடும். அரிசி, பருப்பு போட்டு மூடியவுடன் குக்கர் எடையை உடனே போடாதீர்கள். உள்ளே இருக்கும் தண்ணீர் சீராக கொதிக்க சிறிது நேரம் எடுக்கும். அதற்கு முன்னரே எடை போடும்போது, அதிக அழுத்தம் கேஸ்கெட்டைப் பாதித்து, கசிவு மற்றும் ஆவி வெளியேறுதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆவி சீராக வெளியேறிய பின்னரே எடையைப் போடுவது, குக்கரில் சீரான அழுத்தத்தை உருவாக்கி, கேஸ்கெட் பழுதடையாமல் பாதுகாக்கும். குக்கரை அடுப்பில் வைத்த பிறகு, தீயை மீடியம் ஃபிளேமில் வைக்கவும். அதிக தீயில் வைக்கும்போது கேஸ்கெட்டில் அதிக வெப்பமும் அழுத்தமும் பட்டு, அது சீக்கிரம் பழுதடையும். மீடியம் ஃபிளேமில் சமைப்பது உணவு சீராக வேகவும், குக்கர் சரியான நேரத்தில் விசில் வரவும் உதவும்.

குக்கரை அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு, அழுத்தம் முழுவதுமாக வெளியான 5 நிமிடங்களுக்குப் பிறகு குக்கர் மூடியைத் திறக்கவும். திறந்தவுடன், கேஸ்கெட்டை எடுத்து குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும். சமையலுக்குப் பிறகு கேஸ்கெட்டில் இருக்கும் சூடு அதை பலவீனப்படுத்தும். கழுவி பயன்படுத்துவதன் மூலம் கேஸ்கெட் சீக்கிரம் பழுதடையாது. இதை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. குக்கர் மூடி சூடாக இருக்கும்போதே அதன் மேல் ஒட்டியிருக்கும் கஞ்சியை சுத்தம் செய்தால், காய்ந்த பிறகு சிரமப்படாமல் எளிதாக நீக்கலாம்.

அடுப்பில் வைத்து பயன்படுத்துவதால், பல குக்கர்களின் அடிபாகம் கருத்தும், கறி பிடித்து அசிங்கமாகவும் காணப்படும். அடிக்கடி தேய்த்தாலும் சில கரைகள் நீங்காது. இதற்கு ஒரு எளிய தீர்வு டூத்பேஸ்ட்தான்!

Advertisment
Advertisements

காலி செய்யப்பட்ட டூத்பேஸ்ட் கவரின் உள்ளே இருக்கும் பேஸ்ட்டை ஒரு சிறு துளி எடுத்து, குக்கரின் அடிப்பகுதியில் அல்லது கறி பிடித்த பகுதிகளில் தடவவும். ஒரு சிறிய துண்டு எலுமிச்சை பழத் தோலை எடுத்து, டூத்பேஸ்ட் தடவிய இடங்களை நன்கு தேய்க்கவும். எலுமிச்சை சாறும் பல்பசையும் சேர்ந்து, எவ்வளவு பிடிவாதமான கறையாக இருந்தாலும் எளிதாக நீக்கிவிடும். உங்கள் பழைய குக்கர் கூட புதிது போல பளபளக்கும். குக்கரின் உள் பக்கத்தில் உள்ள ஸ்க்ரூ பகுதிகள் அல்லது மற்ற இடங்களில் பருப்பு போன்றவை ஒட்டி கறையாகப் படிந்திருந்தால், இந்த முறையைப் பயன்படுத்தி எளிதாகச் சுத்தம் செய்யலாம். சாதாரண லிக்விட்களை விட பல்பசை இதில் மிகச் சிறப்பாகச் செயல்படும்.

குக்கரைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது ஏற்படும் மற்றொரு பெரிய பிரச்னை, கைப்பிடி பலவீனமாவதுதான். அடிக்கடி தண்ணீரால் கழுவுவதால், கைப்பிடியின் நட்டு லூஸ் ஆகி, கைப்பிடி கழன்று வரலாம். இது குக்கர் மூடி சரியாக மூடப்படாமல், விசில் வராமல் போக வழிவகுக்கும். வெட்டி எடுத்த டூத்பேஸ்ட் கவரில் இருந்து சிறிய சதுரத் துண்டைக் வெட்டி எடுத்து, அதை ஒரு ஓட்டை போல செய்து கொள்ளவும். இந்தக் கட் செய்த பல்பசை கவர் துண்டைக் குக்கர் கைப்பிடியின் நட்டு பகுதியில் மாட்டி விடவும். இப்போது குக்கர் கைப்பிடியை மூடியில் செட் செய்து, நட்டைப் பயன்படுத்தி டைட் செய்யவும். நட்டின் முன் பகுதியில் பல்பசை கவர் இருப்பதால், அது நல்ல கிரிப்பான சப்போர்ட்டைக் கொடுக்கும். எத்தனை முறை தண்ணீரால் கழுவினாலும் கைப்பிடி லூஸ் ஆகாமல் இருக்க இது பெரிதும் உதவும். அடிக்கடி டைட் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.

குக்கர் கேஸ்கெட்டை எப்பொழுதும் சுழற்றிப் பாருங்கள். அது மூடியுடன் இறுக்கமாக ஒட்டிக் கொள்ள வேண்டும். சப்போஸ் அது நகர்ந்தால், கேஸ்கெட் பலவீனமாகிவிட்டது என்று அர்த்தம். கேஸ்கெட் பலவீனமாகி, தொளதொளவென இருந்தால், அல்லது எளிதாக மடங்கினால், உடனடியாக அதை மாற்றிவிடுங்கள். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது 8 மாதங்களுக்கு ஒரு முறையோ கேஸ்கெட்டை மாற்றுவது மிகவும் அவசியம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: