இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் 6 உணவுகள்

நடுத்தர வயதினரின் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணி குறைக்கும்.

மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர், இந்த உயர் இரத்த அழுத்தம் என்னும் இரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயது வித்தியாசம் இல்லாமல், ஆண் பெண் இருபாலினதவரும் இந்த நோயால் பாதிக்கப் படுகின்றனர். இரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்கு, பாரம்பரியமும் ஒரு காரணம். அதிகமான மன அழுத்தம் கொள்கிறவர்களும், பய தாக்குதலில் அகப்படுபவர்களும், பதட்டத்திற்கு ஆட்படுகிறவர்களும் இந்த நோய்க்கு இரையாகின்றனர்.

1. இரத்த கொதிப்பு உள்ளவர்கள், உப்பின் அளவை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதிகமான உப்பை எடுத்துக் கொள்ளும்போது, உப்பில் உள்ள சோடியம் , உடலின், சிறுநீரகம், இதயம்., தமனிகள், மூளை போன்றவற்றை பாதிக்கிறது. இரத்த அழுத்தம் உயரும் போது, தமனிகளில் அழுத்தம் அதிகமாகி, அவற்றை குறுக்கி விடுகிறது அல்லது, வெடிக்க செய்கிறது.

சில நேரங்களில் அதிக அளவு சோடியம் உட்கொள்ளல் , இதயத்திற்கு இணையும் இரத்தக் குழாய்கள், அதிகமான சோடியம் உட்கொள்ளளால் பாதிப்படைகிறது. தொடக்கத்தில், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது, இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டாகிறது. ஒரு மனிதன் ஒரு நாளில் சராசரி 2.5மிகி அளவு உப்பு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

உப்பை மட்டும் தனியாக உட்கொள்ளுவது அல்லது உப்பு அதிகம் உள்ள உஅனவை அதிகமாக உட்கொள்வது ஆகியவை இரத்த அழுத்தத்தின் அளவை உயர்த்தும்.

2. கீரைகளில்  கலோரிகள்  குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், பொட்டாசியம், ஃபோலேட், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகளும்  நிரம்பியுள்ளது. கீரையை வாரத்தில் இரண்டு நாட்களாவது சாப்பிட்டு வர ரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தியாகும்.
முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையும் மாலையும் 2 கிராம் அளவு  தேனில் குழைத்து சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

3. தூக்கமும் ஓய்வும் முக்கியம். தினமும் குறைந்தது 6 மணி நேரம் தூக்கமும்  வாரம் ஒருநாள் ஓய்வும் அவசியம். மன அழுத்தம் கூடாது. மனதுக்குப் பிடித்த விஷயங்களை செய்தால் மனம்  லேசாகி மன அழுத்தம் குறையும். பரபரப்பையும் கோபத்தையும் குறைத்து, மனதை லேசாக்கிக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

4. பீட்ரூட்டில் இயற்கையாகவே இருக்கும் நைட்ரேட்டினால் ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். ஒரு நாளில் 250 மில்லி பீட்ரூட் சாறு குடிப்பதனால் ரத்த அழுத்தத்தை 7 சதவீதம் அளவிற்கு குறைத்திட முடியும்.

5. ஓட்ஸ் நமக்கு தெரிந்த ஒன்று தான். அனைத்து நேரங்களிலும் நாம் எடுத்துக்கொள்ளுமோர் உணவே இந்த ஓட்ஸாகும். இதில் ஊட்டசத்துக்களும், ஆற்றல் பண்புகளும் அதிகம் காணப்படுகிறது.

இந்த ஓட்ஸில் வைட்டமின் E, B6, B5 போன்ற பல வைட்டமின்கள் நிறைந்திருக்க, கனிமங்களான இரும்பு, செலினியம், மாக்னீசியம், காப்பர் ஆகியவையும் நிறைந்து காணப்படுகிறது.

இது முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு தினமும் தேவைப்படும், பச்சையத்தின் செறிமானத்தை கட்டுபடுத்தி, உடம்பின் இரத்த குளுக்கோஸ் அளவையும் சீராக்குகிறது.

6. நடுத்தர வயதினரின் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணி குறைக்கும். தமனிகள் சிறப்பாகச் செயல்படவும் இது உதவும்.

இதிலுள்ள பீட்டா கரோட்டின் , உடலால் வைட்டமின் ஏ வாக மாற்றப்படும்.  இது முடி மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது. இதன் பட்டையைச் சாப்பிட்ட பிறகு, தூக்கி எறியாமல், சருமத்தில் தடவலாம். இதில் பாக்டீரியல் தொற்று மற்றும் அலர்ஜிக்கு எதிரான தன்மை உள்ளது. முகப்பரு பிரச்னைக்கும் இது நல்ல தீர்வு தரும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close