கெட்ட கொழுப்பு அதிகம் இருக்கா? இத கண்டிப்பாக எடுக்காதீங்க: டாக்டர் சிவராமன்
உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் எந்த விதமான உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் காணலாம்.
உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் எந்த விதமான உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் காணலாம்.
இன்றைய காலகட்டத்தில் பெருகி வரும் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக பலருக்கும் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால், இருதய கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Advertisment
இந்தப் பிரச்சனை இருப்பவர்கள் தங்கள் உணவில் நெய், வெண்ணெய் போன்ற பொருட்களை எடுத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் இருக்கும். அந்த வகையில், யாரெல்லாம் நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் ஆகியவற்றை சாப்பிடலாம் என்று மருத்துவர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார்.
உணவில் சிறிதளவு நேய் சேர்த்து வந்தால் மூட்டு வலி போன்ற பிரச்சனை ஏற்படுவது குறையும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். குறிப்பாக, எண்ணெய், வெண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை உணவில் பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் உடலி இருக்கும் நெய்ப்புத்தன்மைக்கு நல்லது என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார். இது டிஸ்க் பகுதியில் வறட்சி தன்மை ஏற்படாமல் தடுப்பதற்கு உதவுகிறது. எனவே, பெரியவர்கள் இதனை குறைவான அளவிற்காவது எடுத்துக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
மேலும், வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கட்டாயமாக நெய் போன்ற பொருட்களை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் வலியுறுத்துகிறார். இருந்த போதிலும், உடலில் அதிகளவிலான கெட்ட கொழுப்புகள் இருப்பவர்கள், தங்கள் உணவில் நெய் மற்றும் வெண்ணெய் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து விடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - Healthy Tamilnadu Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.