வயதானவர்கள் மட்டுமின்றி தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் கை, கால் மூட்டு வலியால் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை மாற்றும் மற்றும் உணவு முறை மாற்றங்கள் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் அன்டி ஆக்சிடென்ட்ஸ், அன்டி இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். மேலும், எலும்புகளை வலிமையாக பராமரிக்க கால்சியம் சத்தும் அவசியம்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் மஞ்சளில் அன்டி ஆக்சிடென்ட்ஸ் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தேங்காய் பாலில் மஞ்சள் கலந்து தினசரி எடுத்துக் கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ளலாம். இதேபோல், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை தினசரி உணவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மீன், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் காணப்படுகிறது. இதேபோல், திராட்சை, பப்பாளி போன்ற பழங்களில் இருந்து அன்டி இன்ஃப்ளமேட்டரி எளிதாக கிடைத்து விடும். இவை அனைத்தும் கை, கால்கள் மூட்டு வலிகளை கட்டுப்படுத்த பயன்படுகிறது. இதேபோல், பசலைக் கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இவை தவிர நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சுமார் 60 நிமிடங்களாவது நடக்க வேண்டும். மேலும், தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.