Food Hacks to fix your extra spicy recipes Tamil News : நீங்கள் நினைத்ததைவிட மிகவும் காரமாக உங்கள் உணவைச் செய்துள்ளீர்கள் என்பதை உணர்ந்த தருணங்கள் இருந்திருக்கும். அதிலும், உங்களுடைய விருப்பமான உணவு அதிக காரமாகிவிட்டால், அவ்வளவுதான். சமையல் என்பது ஒரு கலை, அது பயிற்சியால் மட்டுமே குறைவில்லாமல் செய்ய முடியும். சிறந்த சமையல்காரர்களும், எப்போதாவது ஒருமுறை, தங்களின் உணவில் சேர்க்க வேண்டிய பொருட்களின் அளவை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சேர்த்துவிடுவார்கள். சுவையில் குறைபாடுகள் இருந்தால், அதனை வேறு சில பொருட்களைக் கொண்டு சரிசெய்யலாம். ஆனால், உப்பு அல்லது மசாலா எதுவாக இருந்தாலும், அதிகமாகிவிட்டால் அதனை சரிசெய்வது கடினம்.
அதிகப்படியான மசாலாவை சகித்துக்கொள்ளும் நபர்கள் இருந்தாலும் அல்லது காரமான சுவையில் தங்கள் உணவை விரும்பினாலும், ஒருவர் எவ்வளவு மசாலாவைத் தாங்க முடியும் என்பதற்கு ஒரு வரம்பு உள்ளது. தேவைக்கு அதிகமாக மசாலா போடுவது அன்றாட சமையலில் பொதுவாக நடக்கும் ஒரு தற்செயலான தவறு. தெரியாமல் இரண்டு முறை மசாலாப் பொடியைப் போட்டிருக்கலாம், அல்லது மிளகாய் காரமாக இருந்ததாலோ, அதிக அளவில் பயன்படுத்தியிருந்தாலோ, என்ன தப்பு செய்தாலும் சாப்பாட்டின் சுவை பாதிக்கப்படும். சாப்பிடும் மனநிலையும் கெட்டுப் போகும். அத்தகைய சூழ்நிலையை நீங்கள் சந்தித்தால், இனி கவலைப்பட வேண்டாம்!
இந்த சிறிய கிச்சன் ஹேக் உங்களுக்கு நிச்சயம் உதவும். சமைத்த உணவை வீணாக்குவதற்கு முன், மசாலா அளவைக் குறைக்கவும், உணவின் சுவையை சமநிலைப்படுத்தவும் நீங்கள் என்ன செய்யலாம் என்பதை அறிய இங்கே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைப் படியுங்கள். உங்கள் உணவில் இந்த 6 பொருட்களைச் சேர்த்து, மசாலா அளவைக் குறைத்து, நீங்கள் நினைத்ததைப் போலவே உங்கள் உணவை ருசிக்கவும்.
பால் வகைகள்

பால் வகைகளை சேர்ப்பது உணவில் மசாலாவின் அளவைக் குறைக்க உதவுவதோடு குளிர்ச்சியான விளைவையும் அளிக்கும். மசாலா அளவை சரிசெய்ய நீங்கள் பால், தயிர் அல்லது கிரீம் சேர்க்கலாம். உணவில் சேர்ப்பதைத் தவிர, சூடான காரமான உணவின் விளைவைக் குறைக்கத் தண்ணீரை விட பால் சேர்ப்பது சிறப்பு.
மேலும் பொருட்களை சேர்க்கவும்

இது ஒரு எளிய தந்திரம் போல் தோன்றலாம் ஆனால், இது நிச்சயம் உங்களுக்குப் பெரிதும் உதவும். தற்செயலாக கூடுதல் காரமான சுவை கொண்ட சூப் அல்லது குழம்பை நீங்கள் தயாரித்திருந்தால், அதை சரிசெய்ய சிறிது தண்ணீர் சேர்க்கவும். நூடுல்ஸ் அல்லது பாஸ்தா போன்ற பிற பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் அல்லது முக்கிய உணவில் அதிக காய்கறிகளைச் சேர்க்கலாம். வெங்காயம், கேரட் மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகளை உணவில் உள்ள சுவைகளை சமநிலைப்படுத்த பயன்படுத்தலாம்.
நட்ஸ் பட்டர்

மசாலாவைக் குறைக்க, ஒரு பாத்திரத்தில் பீனட் பட்டரை சேர்க்கலாம். உணவைச் சாப்பிடும் போது நீங்கள் பீனட் பட்டர் சுவையை சுவைக்க மாட்டீர்கள். மாற்றாக, நீங்கள் பாதாம் பட்டரையும் பயன்படுத்தலாம். இந்த பட்டரின் சுவையானது அதிகப்படியான சுவைகளைக் குறைத்து, மசாலாவை நடுநிலையாக்கும்.
அமிலம்

அமிலம் என்றால், வினிகர், சிட்ரஸ் அல்லது கெட்ச்அப் போன்ற அமிலப் பொருட்களைக் குறிக்கிறோம். இந்த பொருட்களில் ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் அளவு, உங்கள் கூடுதல் காரமான உணவிலிருந்து உங்களைக் காப்பாற்ற உதவும்.
எலுமிச்சை சாறு

அமிலத்தைப் போலவே, சிலதுளி பிழிந்த எலுமிச்சை சாறும் உணவின் காரத்தைக் குறைக்க உதவுகிறது. எலுமிச்சைச் சாறுகளில் உள்ள கசப்பு தன்மை, சுவைகளின் சரியான சமநிலையைப் பெறக் கூடுதல் மசாலாவுடன் செயல்படுகிறது.
இனிப்புகள்

அனைத்து காரமான உணவுகளும் ஒரு இனிமையான பசியைப் பின்பற்றுகின்றன. எனவே, காரமான உணவுக்குப் பிறகு இனிப்பை சுவைப்பதற்கு பதிலாக, கூடுதல் மசாலாவைத் தவிர்க்க உங்கள் உணவில் இனிப்பைச் சேர்க்கலாம். உங்கள் உணவில் சர்க்கரை, தேன் அல்லது வெல்லம் சேர்த்து இனிப்பு சுவையை அளிக்கலாம். ஆனால், அளவை கவனத்தில் கொள்ளுங்கள். அதிகமாக சேர்த்துவிட்டால், உங்கள் முக்கிய உணவு இனிப்பாக மாறிவிடும். சர்க்கரை மற்றும் சர்க்கரைக்கு மாற்றாக மட்டுமல்லாமல், வெங்காயம் மற்றும் தக்காளி போன்ற இயற்கை இனிப்புகளையும் நீங்கள் சேர்க்கலாம். அவை சுவையில் இனிமையானவை மற்றும் சுவைகளை சமநிலைப்படுத்த உதவுகின்றன.
இந்த உதவிக்குறிப்புகள் தவிர, உங்கள் காரமான உணவைச் சாப்பிடுவதற்கும், அது வீணாகப் போவதைத் தவிர்ப்பதற்கும் நீங்கள் மற்ற முறைகளையும் பயன்படுத்தலாம். உணவை குளிர்ச்சியாக உண்பதால் சுவைகள் செட்டில் ஆகி மசாலா அளவை இயற்கையாக குறைக்கிறது. காரமான உணவை சாதுவான அல்லது அதிக நுணுக்கமான உணவுடன் சேர்த்து சமச்சீரான சுவைகளுடன் உணவை உருவாக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil