Food Recipes Tamil, sambar making tamil video: வேலைப்பழு காரணமாக பல நேரங்களில் சமையலுக்கு அதிக நேரம் ஒதுக்க முடிவதில்லை. அந்த நேரங்களில் துரிதமாகவும், சுவையாகவும், சத்தாகவும் உணவுப் பொருளை செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. அப்படியொரு அத்தியாவசிய பொருள்தான், உடனடி சாம்பார்.
இதற்கு அதிகம் காய்கறிகள் தேவையில்லை. குறைவான பொருட்களைக் கொண்டு குக்கரில் உடனடி சாம்பார் தயார் செய்யலாம். சுவையான, சத்தான உடனடி சாம்பார் எப்படி தயார் செய்வது? எனப் பார்க்கலாம்.
sambar making tamil video: உடனடி சாம்பார்
உடனடி சாம்பார் செய்யத் தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1 கப், சின்ன வெங்காயம் – 7, மஞ்சள் – 1/2 டீ ஸ்பூன், தண்ணீர் – 2 1/2 கப், உப்பு – தேவையான அளவு, காய்கறிகள் தேவையான அளவு, சாம்பார் பொடி – 3 டீ ஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன், புளி – சிறிதளவு, தக்காளி – 1, பூண்டு – 6 பற்கள்
முதலில் துவரம் பருப்பைக் கழுவி குக்கரில் போடவும். புளி ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதிலேயே சின்ன வெங்காயம், மஞ்சள், தக்காளி, பூண்டு, உப்பு சிறிதளவு சேர்க்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து, 4 விசில் வரும்வரை வேக வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் விசிலைத் திறந்துவிட்டு, பருப்பை குக்கரிலேயே கடைந்து கொள்ளுங்கள். அதனுடன் நறுக்கிய காய்கறிகள், மிளகாய் பொடி, சாம்பார் பொடி, உப்பு சேர்க்கவும். புளித் தண்ணீருடன் சேர்த்து, நீங்கள் சேர்த்துள்ள காய்கறி அளவுக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றுங்கள். மீண்டும் குக்கரை மூடிவிடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
ஒரு வாணலியில் தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்துவிடுங்கள். தாளித்தவற்றை குக்கரில் உள்ள கலவையுடன் சேர்த்தால், ருசியான உடனடி சாம்பார் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“