உணவை சமைப்பது என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அடிப்படை வாழ்க்கைத் திறமையாகும், சிலர் இதை முழுமையாக அனுபவித்து செய்கிறார்கள், மற்றவர்கள் செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்கிறார்கள். இருப்பினும், நீங்கள் ஒரு புதிதாக சமைப்பவராக இருந்தாலும் சரி அல்லது ஒரு தொழில்முறை நிபுணராக இருந்தாலும் சரி, சமையலில் தேர்ச்சி பெறுவதற்கு சில பயிற்சிகள் தேவை – இது சமையல் பரிசோதனைகள் மற்றும் அனுபவத்துடன் மட்டுமே வரும்.
இருப்பினும், இந்த செயல்முறையை மிகவும் எளிமையாக்க, சில சோதனை செய்யப்பட்ட மிகவும் பயனுள்ள குக்கிங் ஹேக்ஸ் உள்ளன, அவை சமையலறையில் உங்களுக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் சமையல் மற்றும் உணவை சேமிக்கும் திறன்களையும் மேம்படுத்தும். அவை என்ன என்று யோசிக்கிறீர்களா?
மாஸ்டர்செஃப் பங்கஜ் பதூரியா, சமையலறையில் உங்கள் நேரத்தை முடிந்தவரை மன அழுத்தமில்லாததாக மாற்ற இதுபோன்ற சில எளிய ஹேக்குகளைப் பகிர்ந்துள்ளார்.
காளான் சேமிக்க

காளான்களில் அதிக ஈரப்பதம் இருப்பது, அவற்றின் ஆயுளைக் குறைக்கிறது. ஆனால், இந்த எளிய ஹேக் மூலம், நீங்கள் இப்போது காளான்களை அதிக நேரம் சேமிக்க முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், காற்று புகாத பாத்திரத்தை எடுத்து காய்ந்த துணி அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து, காளான்களை அதன்மீது வைக்கவும். பின்னர் காளான்களுக்கு மேலே ஒரு நாப்கின் வைத்து பாத்திரத்தை மூடவும். இப்படி செய்வதால், காளான்கள் குறைந்தது ஒரு வாரம் நீடிக்கும்.
பனீரை வெட்டி சேமிப்பது எப்படி?
ஃபிரிட்ஜில் சேமித்து வைத்த பிறகு, உங்கள் பனீர் கசப்பாகவும், கடினமாகவும், மெலிதாகவும் மாறினால், இந்த தந்திரம் உங்களுக்கானது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் பனீரை வைக்கவும். அதை ஃபிரிட்ஜில் சேமிக்கவும். இது பனீர் கடினமாகவும், மெலிதாகவும், கசப்பாகவும் மாறுவதைத் தடுக்கும்.
மேலும் பங்கஜ் பனீரை வெட்டுவதற்கு கத்திக்கு பதிலாக ஒரு நூலைப் பயன்படுத்த பரிந்துரைத்தார்.
கிளாஸ் வெடிக்காமல் தடுப்பது எப்படி?

பெரும்பாலும் குளிர்காலத்தில், நீங்கள் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஒரு சூடான திரவத்தை ஊற்றினால், அது விரிசல்களை உருவாக்குகிறது. அது நிகழாமல் தடுக்க, கண்ணாடி பாத்திரத்தில் சூடான பானத்தை ஊற்றுவதற்கு முன் ஒரு ஸ்டீல் ஸ்பூனை வைக்கவும். இது உங்கள் கண்ணாடி வெடிப்பதைத் தடுக்கும். கண்ணாடி வெப்பத்தின் மோசமான கடத்தி மற்றும் ஸ்டீல் ஒரு நல்ல வெப்ப கடத்தி.
எனவே, ஒரு சூடான பானத்தை ஒரு கிளாஸில் ஊற்றினால், அதன் உள்பரப்பு வெப்பமடைகிறது, அதே சமயம் அதன் வெளிப்புற பரப்பு குளிர்ச்சியாக இருக்கும் – அது விரிசல் ஏற்பட காரணமாகிறது. அதேசமயம், ஒரு ஸ்டீல் ஸ்பூனை அதன் உள்ளே வைத்தால், அது வெப்பத்தை உறிஞ்சி, விரிசல் ஏற்படுவதைத் தடுக்கிறது.
எலுமிச்சை

எலுமிச்சை பழங்கள் ஒரு மாதத்திற்கு புத்துணர்ச்சியுடன் இருக்க, அவற்றை எவ்வாறு சேமிப்பது என்பதற்கான உதவிக்குறிப்பு இங்கே. ஒரு கண்ணாடி பாத்திரத்தை எடுத்து, அதில் தண்ணீர் நிரப்பவும், அதில் எலுமிச்சைகளை போட்டு, ஜாடியை மூடவும். இந்த வழியில், எலுமிச்சை நீண்ட காலத்திற்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். எலுமிச்சையிலிருந்து அதிக சாற்றைப் பெற, அவற்றை வெட்டுவதற்கு முன் அவற்றை மேசையில் வைத்து கையில் உருட்டவும்.
அடுத்தமுறை சமைக்கும் போது மறக்காமல் இந்த குறிப்புகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“