வயது முதிர்வு என்பது எல்லோருக்கும் வரக் கூடியது தான். இதனை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், வயது முதிர்வில் ஏற்படக் கூடிய சோர்வு, உடல்நல பாதிப்பு ஆகியவற்றை இயற்கையான முறையிலேயே நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதற்காக சத்துகள் மிகுந்த உணவுகளை நாம் சாப்பிட வேண்டியது அவசியம். அவை குறித்து தற்போது நாம் பார்க்கலாம்.
இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பழங்களையும், காய்கறிகளையும், கீரை வகைகளையும் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். இதில் இருக்கும் சில சத்துகள் மருந்துகளில் இருந்து கூட கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
மாதுளம் பழம், பப்பாளி, நாவல் பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம். இவற்றில் ஆன்ட்டி ஆக்சைடுகள், பெப்பின், வைட்டமின் ஏ, சி, இ போன்ற சத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கிரீன் டீ குடிக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சைடு, அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இவை கொலாஜினை பாதுகாப்பதற்கும் அதனால் வயதாவதை தாமதப்படுத்தவும் உதவுகிறது எனக் கூறப்படுகிறது.
மேலும், அதிகமாக எண்ணெய் சேர்த்த உணவுகள், அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள், உப்பு மிக அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை நம் உடலுக்கு எளிதாக தீங்கு விளைவிக்கக் கூடியவை.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“