பணிசெய்யும்போது உங்கள் சத்துக்களை இழக்க விடாதீர்கள். இந்த எளிதான உணவு முறைகளை கடைபிடித்து பாருங்கள்
பணியில் கவனம் செலுத்த முடியாமல், எப்போது மணி 6ஐத்தொடும், உடனே பொருட்களை மூட்டை கட்டிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பி ஓடலாம் என்று தோன்றும். அதற்கு காரணங்கள் வேண்டுமானால் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், நாள் முழுவதும், நாம் கடந்து வந்த போராட்டம், வேலை செய்யாத நேரத்துடன் சேர்த்து, அடுத்த நாளைக்கு அந்த வேலைகளை வைத்துக்கொண்டு, ஒன்றுமே செய்யவில்லை என்ற உணர்வுடன் இருப்போம். உங்களின் பணித்தொடர்பான மனச்சோர்வுகளை போக்க உங்களுக்கு சத்துமிக்க ஆகாரங்கள் தேவைப்படுகின்றன. அதற்கு ஊட்டச்சத்து நிபுணர், லவ்னீட் பட்ராவின் உதவி இங்கே கிடைக்கிறது. தனது இன்ஸ்டகிராமில், மனஅழுத்தம் ஏற்படும்போது, உங்களின் பலத்தை இழந்து எதிர்மறை எண்ணத்தை பெறுவது வெகு தொலைவில் இல்லை. அதற்காக நிறைய நொறுக்கு தீனி வகைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அது உங்களின் உடலுக்கும், மனதிற்கும் மகிழ்ச்சியையும், உறுதியையும் கொடுக்கும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கிரீன் டீயும், கொண்டை கடலையும் சாப்பிடுவது மிக நல்லது. கடுமையாக உழைத்த பின், நாள் முழுவதும் உங்களை ஓய்வாக உணரவைப்பதுடன், உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்துகிறது.
கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்களும், சத்துக்களும் ஒருவரின் மனநிலையில் சக்திவாய்ந்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, கொழுப்பை குறைப்பதையும் வேகப்படுத்துகிறது.
கொண்டைக்கடலை ரத்ததில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தையும் நிலைப்படுத்துகிறது. கடினமான நேரங்களில் இவை இரண்டும் அதிகமாக தேவைப்படுகிறது.
பாதாம், டார்க் சாக்லேட்
ஒரு துண்டு டார்க் சாக்லேட் மற்றும் ஒரு கைப்பிடி பாதாமும் உடனடியாக எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலில் உள்ள டோபோமைன் அளவை அதிகரிக்க உதவுகிறது. டோபோமைன் உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கிறது. ஒருவரை பலமானவராக உணர வைக்கிறது. மற்ற விஷயங்களுக்கு மத்தியில், உணர்ச்சிவசப்படும் பழக்கத்தை தடுக்க உதவுகிறது.
அஸ்வகந்தா டீ மற்றும் 2 உலர் திராட்சைகள்
அஸ்வகந்தா டீயும், 2 உலர் திராட்சைகளும், உடனடியாக உடலுக்கு ஆற்றலை அளிக்கும் என்று பட்ரா அறிவுறுத்துகிறார். இது நீங்கள் மந்தமாக வேலை செய்வதுபோல் உணரும் தருணத்தில் சுறுசுறுப்பு பெற உதவும்.
இவற்றை நீங்கள் இதுவரை முயற்சி செய்துள்ளீர்களா?
தமிழில்: R. பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.