தூக்கம் என்பது ஏதோ ஓய்ந்திருக்கும் நேரம் மட்டுமே என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது அதற்கு மேலான ஒன்றாக இருக்கிறது. “தூக்கம் என்பது மெய்யாகவே, தசைகள் இறுகி தளர்வது, நாடித்துடிப்பும் ரத்த அழுத்தமும் கூடிக்குறைவது, மனது தனது சொந்தக் காட்சிகளை உருவாக்குவது ஆகிய செயல்கள் அடங்கிய ஒரு சிக்கலான செயல்முறையாக இருக்கிறது” என்பதாக தி டோரன்டோ ஸ்டார் சொல்கிறது. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்வதாவது: “ஒரு நபர் தூங்கும்போது, செயல்களெல்லாம் குறைந்து தசைகள் தளர்வடைகின்றன. இதயத் துடிப்பும் சுவாசிக்கும் வேகமும் குறைவடைகின்றன.” எனவே துாக்கம் ஒருவருக்கு மிக முக்கியம்.
இந்நிலையில், துாக்கத்தை அதிகரிக்கும் உணவுகள் குறித்து பார்க்கலாம்.
செர்ரி, பாதாம், கெமோமைல் டீ, வெதுவெதுப்பான பால், வாழைப்பழம், ஓட்ஸ், டார்க் சாக்லேட் போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல துாக்கம் வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
டிமென்ஷியா என்ற நினைவாற்றல் மங்கும் நோய் பாதிப்பு உள்ளவர்களை கவனித்து கொள்பவர்களுக்கு தூக்கம் தடைபட்டிருக்கும். எனவே அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
ஒரு நாளுக்கான துாக்கத்தை துாங்காது விடும் போது அவர்களின் உடல் நலம் முழுமையாகப்பாதிக்கப்பட்டு விடும். ஆழ்ந்த உறக்கம்தான் ஆரோக்கியமான உடலுக்கு அடித்தளம்.
துாக்கம் குறித்து சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையின் தகவலின்படி, தூக்கமின்மை, டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்களின் பாதிப்புள்ளவர்களை கவனித்து கொள்பவர்களுள் 3268 பேரின் உடல் அசைவு, தூக்கம், மற்றும் மூளையின் செயல்பாடு போன்றவை பரிசோதிக்கப்பட்டதோடு, பகலில் உடற்பயிற்சி செய்பவர்கள், மதிய நேரங்களில் தேநீர் அல்லது காபி குடிக்காதவர்கள் இரவில் மது அருந்தாதவர்கள் என்பவர்களிடமும் பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனாலும் இதுபோன்ற பழக்கங்கள் தூக்கத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன.
தூக்கம் தடைபட்டால், மூளை செயல்பாடுகளை பாதிப்பதுடன் உணர்ச்சி நிலையில் ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்தும். மேலும் மன அழுத்தம் மற்றும் நரம்பு மண்டலத்தில் சிக்கல் போன்றவற்றை உண்டாக்கும்.
எனவே கட்டாயமாக 7-8 மணி நேர தூக்கம் உடலுக்கு அவசியமானது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.